பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அருளியுள்ள உபதேசங்கள் என்றைக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்துவன.

அச்சம் நீங்கினாலே ஆண்மை விளங்கும். பயம், மிகப் பெரிய தீமை. உலக மாந்தரைப் பயத்திலிருந்து மீட்பதே முதற்கடமை. நமது நாடு புகழ்பூத்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது. இந்திய நாடு அடிக்கடி ஏறபட்ட அந்நியர்களின் படையெடுப்புகளோடு போராடி, போராடிக் களைப் படைந்து விட்டது.

அதுமட்டுமா? கல்வி, கலை முதலிய சாஸ்திரங்களை இழந்து நாளுக்கு நாள் பின்னடைவு பெற்று வருகிறது. மேலும், நமது மக்களிடத்தில் வீரியமும் தைரியமும் தர்ம குணமும் பிரம்ம ஞானமும் போய், அவர்கள் பொறாமை, வயிற்றெரிச்சல் முதலிய அற்ப குணங்களுக்கு இரையாகி இழிநிலையை அடைந்து விட்டனர்.

எழுமின் எழுமின் ஆட்டு மந்தையில் பழகிய சிம்மமாகி விடாதீர்கள்!” இது பாரத மக்களுக்கு பாரதியின் வேண்டுகோள்!

நமது நாட்டுக்குப் பயமற்றவர்கள் தேவை, அறிவாளிகள் தேவை; பலசாலிகள் தேவை என்று பாரதி உணர்கிறான்; உணர்த்துகிறான்! இளைஞர்கள் வலிமை பெற சிலம்பு, கஸ்ரத், கர்லா முதலியன- பாடசாலை அமைத்து, கற்றுக் கொடுக்கும்படி கிராம சபையினரை வேண்டி கேட்டுக் கொள்கிறான்.

அதற்கு கைமாறாக ஓர் ஆண்டுக்குப் பத்திரிகை இலவசமாக அனுப்புவதாகவும் எழுதுகிறான். கேடுகளுக்கெல்லாம் காரணமான பயத்திலிருந்து விடுதலை பெற்று வலிவும் பொலிவும் பெற்று விளங்கும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

சரீர வாதனை, இழப்பு, பசி, துன்பம் முதலியன பற்றி, கவலைப்படாமல் துணிவுடன் வாழ்க்கை நடத்தும்