பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




5

தீ வைக்கட்டுமே

கவிஞன் பாரதி, காலவெள்ளத்தில் கரைந்து போனான். ஆனாலும், அவனது கவிதை முழக்கம் செந்தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கேட்கிறது. அக்கவிதை முழக்கத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள், கவிதை முழக்கமா கேட்கிறது? இல்லை. கவிதைக்குப் பின்னணியில் கருத்தினையொட்டிய எழுச்சிமிக்க செயற்பாடன்றோ தெரிகிறது.

கவிஞன் பாரதி ஏழை நாட்டில் பிறந்தான், அடிமையாகப் பிறந்தான். அடிமையாகவே வாழ்ந்து மறைந்தும் போனான். ஆனால், அவன் அடிமையாக வாழ்ந்தாலும் அவன் உள்ளம் என்றும் சுதந்திரமாகவே விளங்கியது. அவனது கவிதைகள் சுதந்திரமாகவே பிறந்தன. அவனுடைய கவிதா சக்தி, அந்நிய ஆட்சியை வெற்றிகொண்டு நின்று விளங்கியது. அவனுடைய புதுமை வேட்கை, வறட்சி நிறைந்த பழமையைப் புறங்காணச் செய்தது. கவிஞன் பாரதி உணர்ச்சிப் பெருக்கால் உந்தப்பட்டு, மட்டும் கவிதை இயற்றியவனல்லன் - அவனுடைய தேசபக்தி உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது. இந்த நாடு சுதந்திரம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது அதனாலன்றேர். 'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே'... - 'ஆனந்த...சுதந்திரம்...' என்று