பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






6


பாரதியின் சக்தி வழிபாடு


பாரதி, அடிமையாகப் பிறந்தவன்; அடிமையாக வாழ்ந்தவன்; அடிமையாகவே மறைந்தவன். ஆனால் பாரதிக்கும் மற்றைப் பெரும்பான்மையோருக்கும் ஒரு வேற்றுமை இருந்தது. பாரதி, அடிமையாக இருப்பதற்கு வருந்தினான்; அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேட்கை கொண்டான். இல்லை. பாரதியின் ஆன்மா அடிமைத்தளத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டது! பாரதி, அடிமைத் தளத்தில் முடங்கி கிடக்கும் நாட்டு மக்களை எழுச்சியுறச் செய்ய வேண்டுமென எண்ணினான். எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் அடிப்படை ஆற்றல் அதாவது சக்தி. எனவே, ஆற்றலை வழங்கும் சக்தி வழிபாட்டைப் பாரதி விரும்பினான்; செய்தான் சக்தியைப் பெற்றான். அவன் மூலம் இந்த நாடும் சக்தியைப் பெற்றது; நாடும் விடுதலை பெற்றது.

வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமல்ல. அஃது ஓர் உயிரியல் முயற்சி. தாழ்ந்து கிடக்கும் உயிர் உயர்ந்து விளங்க வேண்டுமென்ற வேட்கையில் எல்லையற்ற பரம்பொருளைத் துணையாக நாடிப்பெறும் முயற்சியே வழிபாடு, கடவுளை முன்னிட்டுச் செய்யப் பெற்றாலும் வழிபாட்டின் பயன்,