பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் சக்தி வழிபாடு

253


கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான். மற்றவனைப் பற்றி எண்ணிப்பார்க்க மறுக்கிறான். மனிதர்களை மையமாகக் கொண்டு கட்சிகள் தோன்றி இயக்கும் கொடுமை இந்த நாட்டில்தானே நடக்கிறது! நாடு, மக்கட் சமுதாயம்-என்ற கவலையா வந்திருக்கிறது? விலங்குகளும் கூடத் தம் வயிற்றுக்கு உணவு தேடித் தின்று வாழ்ந்து விடுகின்றன. மானிட சாதியைப் போல விலங்குகளில் பட்டினிச் சாவைக் காணோம். ஆனால், நாட்டைவிட, சமுதாயத்தைவிடத் தான் பெரிது என்ற உணர்வு மானிட உலகில் வளர்ந்துவருகிறது. இதன்விளைவுதான் ஒழுக்கக் கேடுகள்! நீர்வாயுக் குண்டுகளை ஒத்த கொலைக் கருவிகள்! ஆற்றல் மிக்க வாழ்க்கை உலகத்தையே வாழ்விக்கும், மாநிலம் பயனுற வாழ வகைசெய்யும். ஆற்றலோடு வாழ்பவர்கள் நிலத்திற்குச் சுமையென ஒரு பொழுதும் வாழார் நிலத்திற்குப் பொருள் சேர்ப்பர்; புகழ் சேர்ப்பர்; நிலத்தின் பயனைக் கூட்டுவர்; இங்ஙனம் பயனுற வாழ்வதற்காகச் செய்யும் வழிபாடே ஆற்றல் வழிபாடு-சக்தி வழிபாடு!

      நல்லதோர் வீணை செய்தே-அதை
          நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
      சொல்லடி சிவசக்தி!-எனைச்
          சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்!
      வல்லமை தாராயோ!-இந்த
          மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
      சொல்லடி சிவசக்தி!-நிலச்
          சுவையென வாழ்ந்திடப் புரிகுவையோ!

என்பார் பாரதி.

உயிர் வாழ்க்கைக்குத் துணை உடல், உயிரின் உள்ளம் விரும்புகிறபடி உடல் செயற்படவேண்டும். உயிர்-உள்ளத்தின் விரைவுக்கு இசைந்தவாறு உடல் இயங்க வேண்டும். இது பாரதியின் பிரார்த்தனை! ஆம்! உடலுக்கு அடிமைப்