பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் இலட்சியம்

275


பாடுவது தன்னேரில்லாத் தலைவனுக்கே ஆகும். இப்பத்தும் சேர்ந்தது தசாங்கம் என்பதும், அது தன்னேரில்லாத் தலைவனுக்கே உரியதாக வேண்டும் என்பதும் தசாங்கத்தின் இலக்கணம் ஆகும். அந்தத் தசாங்கத்தின் இலக்கணத்தை மனத்தில் இருத்திப் பார்க்கும் போது பாரதி பாரத நாட்டுக்குத்தான் தசாங்கம் பாடியுள்ளானே தவிர தமிழ் நாட்டிற்குப் பாடவில்லை. வீட்டிலே சிற்றன்னைகள் பலர் இருப்பினும் பெரிய அன்னைக்கு உரிய மதிப்பை, அப்பெரிய அன்னைக்கும் எனைய சிற்றன்னைக்குரிய மதிப்பிற் குறைவுபடாது சிற்றனையருக்கும் கொடுப்பது போல, பாரதக் குடும்பத்தில் பெரிய அன்னையாகிய பாரதத் தாய்க்குத் தரும் மதிப்பை, மற்ற தமிழ், தெலுங்கு, குஜராத்தி, வங்காள அன்னையருக்குத் தருவதனைக் காட்டிலும் சற்று அதிக மாகத் தர எண்ணியே தமிழ்த் தாய்க்குப் பாடாத தசாங்கத்தைப் பாரதத் தாய்க்குப் பாடியுள்ளான். அதில் அவன் நாடாக,

"பேரிமய வெற்புமுதல்
பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றேஅறி"

என்று தன்னாட்டின் எல்லைக்குள்ளாக இமயத்தையும், குமரி முனையையும் காட்டுகின்றான்.

பாப்பாவுக்குக் கூறும்போது பாரதி தமிழ்நாட்டை மிகவும் வற்புறுத்துகிறான்.

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று கூறுகிறார். அப்பாட்டின் இறுதியில் ஆன்றோர்கள் "தேசமடி பாப்பா என்று முடிக்கின்றார். பாரதியைப் பொறுத்தவரையில் தேசம் என்ற சொல்லைப் பாரத நாட்டைக் குறிப்பதாகவே பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். மேலும் அப்பகுதியிற் பாடும் பாரதி பாரத நாட்டிற்கு ஒன்றும் தமிழ்நாட்டிற்கு ஒன்றும்; பின்