பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

283



இன்றைய உலகம் விரிந்து பரந்து உள்ளது. நிலத்திலும் வானத்திலும் புதிய புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் இல்லாவிட்டாலும்-அமெரிக்காவில் இல்லாவிட்டாலும் - தென்னாப்பிரிக்காவில் இத்தகைய சுதந்திரம் கிட்டாத போது, இந்தப் பாடல் அவர்களது உள்ளத்தில் எழுச்சியைத் துாண்ட வேண்டாவா? எட்டயபுர மண்ணில் பிறந்தவரானாலும் அவர் தமிழகத்திற்குபாரததிற்கு மட்டுமின்றி உலகச் சமுதாயத்துக்கும் சிறந்த கருத்துகளைத் தரும் அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டவன். அவன் இந்த நாட்டுக்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் சொந்தமானவன். உலகச் சமுதாயத்தில் எங்கு எங்கு சண்டை சச்சரவுகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவன் பாடல் பயன்படும். இனவெறி நிறவெறி பிடித்த நாடுகள் சுதந்திரம் பெறாத நாடுகள் இந்த உலகில் இன்னும் எத்தனையோ உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிடித்தாட்டக் காண்கிறோம். அடிமைத்தளையில் சிக்குண்டு தவிக்கும் நாடுகள் பலவற்றைப் பார்க்கிறோம் இன்றைய உலகத்தில். ஆகவே அங்கெல்லாம் பாரதி போக வேண்டும், அவன் பாடல் ஒலிக்க வேண்டும். உலகப் பிரச்சனைகள் தீரும் வரை-அவை வளர்ந்து கொண்டிருக்கும் வரை இந்தப் பாடல் வேண்டியது தானே? காலங் கடந்ததாக முடியுமா?

ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை
ஆரியமைந்தன் அகத்தியன் என்றோ?
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

என்ற பாடலைச் சுட்டிக் காட்டி இது. காலங்கடந்த பாடல், சிவபெருமான் தமிழ் மொழியைத் தோற்றுவித்திருக்க முடியுமா? மொழியைத் தனி ஒருவன் தோற்றுவிக்க முடியுமா?