பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கேட்டான் பாரதி. அவன் ஆங்கிலேயரை மட்டும் பார்த்துக் கேட்கவில்லை. இன்று நம் எல்லைப் புறத்தில் ஓயாது தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் பகைவரைப் பார்த்தும் அவன் இதே வினாவை எழுப்புவான். உயிரோடு இருந்தால், அவன் அன்று எழுப்பிய வினா இன்று தென்னகத் தலைவர்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுந்து நின்றதைக் கண்டோம். நாட்டுப் பிரிவு பற்றிய எண்ணம் தூக்கி எறியப்பெற்றது அந்த நேரத்தில். அனைவர் பார்வையும் இந்தப் பாரதத்தைக் காக்கத் திரும்பியது. இங்ங்னம் பல கட்சித் தலைவர்களையும் மக்களையும் ஒன்றுபடுமாறு ஊக்குவித்த அந்தப் பாரதியின் பாடல் காலங்கடந்ததா? அது நமக்கு வேண்டாவா?

"செப்புமொழி பதினெட்டுடையாள்-எனிற்.
சிந்தனை ஒன்றுடையாள்"

என்று பாடினான் பாரதி.


இன்று பல்வேறு மொழிகளைப் பெற்றிருக்கும் பாரத நாடு சிந்தனையால் ஒன்றாய்விட்டதா? இல்லை. ஒன்றாக்கசிந்தனையால் ஒன்றாக்க முயற்சித்து வருகிறோம். ஆற்றில் பிள்ளையார் கட்ட முயற்சிப்பது போல முயல்கிறோம். காலம் சற்று நீடித்தாலும் இறுதியில் வெற்றியடைவோம். ஒத்து ஊதுபவனுடைய ஒத்து ஒலி, நாதசுரத்திலிருந்து வேறாக வேறுபட்டு ஒலித்தாலும் அவன் ஊதும் சுதி நாதசுரத்துடன் ஒத்திருப்பது போல மொழிகள் பலவாக-பதினெட்டாக வேறுபட்டிருப்பினும் அம்மொழிகள் பேசும் மக்களது சிந்தனை ஒத்திருக்க வேண்டும். ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறான். சாதியைத் தொலைப்பதில்-பொருளாதார ஏற்றத் தாழ்வைப் போக்குவதில் அனைவரும் இந்தப் பாரத நாட்டின் குடிமக்கள்-நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதில் சிந்தனை ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறான். ஆகவே மொழி வேறு பட்டாலும் சிந்தனை ஒன்றுபடாத இந்தக் காலத்தில்