பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16
பாரதிதாசனின் உலகம்

1. பாரதிதாசன் கண்ட சமுதாயம்


அன்பிற்கும் பாராட்டுதலுக்குமுரிய துணைவேந்தர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! மாணவ நண்பர்களே! பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழா நிகழும் காலத்தில் பாவேந்தன் பாரதிதாசன் பிறந்த மண்ணில் பாவேந்தனைப் பற்றி எண்ணவும் பேசவும் தங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் வாய்ப்பளித்த புதுவைப் பல்கலைக் கழகத்திற்கும் துணையாயமைந்த திரு. ஆனந்தரங்கம் பிள்ளை குடும்பத்தினர் அறக் கட்டளை யினருக்கும் நன்றி! கடப்பாடு!

முன்னுரை

தமிழர் வளர்ந்த தலைமுறையினர்: ஆம்,! தமிழ் மொழி வளர்ந்த மொழி. மானுடத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் வாழ்தலுக்கும் வழிகாட்டும் சான்றோர் பலர் தமிழகத்தில் வாழ்ந்தனர்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சிந்தனை உயர்ந்திருந்தது; முதிர்ச்சி அடைந்து இருந்தது; உலகத்தை இயக்கும் உயிர்ப்புப் பெற்று இருந்தது. தமிழர்