பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

315


உருமாற்றம் பெற்று விலைமதிப்புக் கூடியதே அந்த மதிப்புக்கும் இடையேயுள்ள உழைப்பாளியின் பங்கைப் பலர் திருடுகின்றனர். இது குற்றமல்ல. உரிமையாகிவிடுகிறது. பிறர் பங்கைத் திருடும் இந்த உரிமை இன்று பாதுகாக்கப்படுகிறது.

சாதிக் கொடுமை

சாதிகளைச் சாடுவதில் பாவேந்தன் பாரதிதாசன் மிகவும் முன்னேறிவிட்டான்; சாதிகளை எதிர்த்துப் பல நூற்றாண்டுகளாகப் பாடியோர் உண்டு. ஆதி நாளில் திருநாளைப்போவார், கருவறைக் கதவைத் தட்டித் திறக்க முயன்றார்! பூசாரியின் வரம் கிடைக்கவில்லை. கடவுளானாலும் கதவைத் திறக்க முடியவில்லை. பூசாரியின் ஆதிக்கம்! கடவுளின் கருணையால் கடவுட் காட்சிக்கு இருந்த தடை நீங்கியது. அன்று கடவுட் காட்சிக்கே தடையிருந்தது போலும்! திருநாளைப்போவார் விட்டபாடில்லை! தொடர்ந்து போராடினார்! தீயில் வீழ்ந்து போராடினார்! புதிய ஐயராகத் திருநாளைப்போவார் தோன்றினார்! ஆயினும் அந்த வரலாறு தொடரவில்லை. ஐயர். ஐயரே! புலையர் புலையரே! என்ற நிலையே நீடித்தது - நீடித்துக் கொண்டிருக்கிறது! இன்னமும் திருக்கோயில் கதவு திறக்கப்படவில்லை. அடைத்திருப்பவர், சிறுகூட்டம்! திறக்க விரும்புபவர் பெருந்திரளான கூட்டம். ஆயினும் திறக்க இயலவில்லை. கொள்கை சிறந்திருந்தால் போதுமா? தெளிவும் உறுதியும் வேண்டாமா? இவையிரண்டும் இன்றையத் தமிழருக்கு இல்லை. ஆயினும் பாவேந்தன் சாதிகளை, பச்சையாகக் கருணையின்றித் தாக்கித் தகர்க்கும் சொற்களால் பாடினான்.

தீண்டாமையை எதிர்த்து உரத்த குரலில், விவாத அடிப்படையில் வினாக்களைத் தொடுக்கிறான்.