பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

321



பெண்ணின் பெருமை

பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாவேந்தன் பாரதி தாசன் உரத்த குரலில் பாடுகின்றான்; போராடுகின்றான். பெண் குழந்தை தாலாட்டு அற்புதமான படைப்பு. நயம்பட அமைந்த கவிதைகள் பலவே. ஆயினும் இது தனிச் சிறப்புடைய கவிதை. இக்கவிதையில் கவிஞனின் ஆத்திரம் இல்லாத ஆவேசத்தையும் காண்கிறோம்.

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேச வந்த
- பெண்ணழகே!”

(பெண் குழந்தை தாலாட்டு 5-6 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி)

என்று பாடுகின்றான். மானுடத்திற்கு வாய்க்கும் சிறப்பெல்லாம் பெண்மையின் பெருஞ்சிறப்பினாலேயே என்று கவிஞன் பாடுகின்றான். மடப் பழக்கங்கள் பெரும்பாலும் பெண்களைப் பிடித்தாட்டுவது இயற்கை ஆனால், பாவேந்தனின் பெண், மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவந்த கற்பூரப் பெட்டகமாக விளங்குகின்றாள்! இந்தக் கவிதை முழுதும் பெண்ணைப் புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாகப் படைத்துப் பாராட்டுகின்றான்! இத்தகு சிறப்புக்களெல்லாம் உடைய பெண்கள் இன்னமும் விடுதலை பெற்றார்களில்லை! உரிமை பெற்றார்களில்லை! பெண் பிறவி இழிவு என்ற கருத்துக்கூட மாறவில்லை!

இன்று இங்கும் அங்குமாகச் சில பெண்கள் கல்வி கற்பது உண்மை. உயர்கல்வி கற்பதும் உண்மை. அரசுப் பணிகளில் அமர்வதும் உண்மை. ஆயினும் அவர்கள் சமநிலை உரிமை கலந்த ஒருநிலை உரிமை பெற்றார்களா? அதுதான் இல்லை. பெண்மை தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகிறது. "அன்புடைய மாமனும் மாமியும் நீ!” என்று தேவாரம் பெசும். இத்தகு அன்புடைய மாமனும் மாமியும்