பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

331


பாரதிதாசனின் உலகம்

331


கருவிகளும் பொதுவாக்கப் படவேண்டும் என்று கூறு கின்றார். நமது பாவேந்தன் பாரதிதாசனும் "உடைமையைப் பொதுமைசெய்” என்று ஆத்திசூடியில் கூறுகின்றான்.

பாவேந்தன் பாரதிதாசன் தமிழன்; தமிழ்க் கவிஞன்! தமிழ் எழுச்சிக்குப் பாடிய கவிஞன்! ஆயினும் அவனுடைய விசாலப் பார்வை பெரிது! பெரிது! "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாடிய வரிகள் நூற்றுக்கு நூறு பாரதிதாசன் சாரம்! பாரதி, கலியுக வீழ்ச்சியின் சின்னமாகிய ருஷ்யப் புரட்சியை அறிந்தவன்; அறிந்து வரவேற்றவன். "யுகப் புரட்சி” என்று பாரதி அதை வரவேற்கிறான்! 'புரட்சி' என்ற சொல் தமிழிலக்கியத்தில் முதன் முதலாக ஆக்கப் பெறுகிறது! பாரதியை அடியொட்டி பாரதிதாசன் பொதுவுடைமைக் கவிஞனாகவே பாடுகின்றான்!

பொதுவுடைமைச் சமுதாயம் என்றால் என்ன? மானுடம், அரசியல், சமூகவியல், பொருளியல் அனைத்திலும் சுதந்திரம் பெற்று விளங்குவதே. பொதுவுடைமை. செய்யும் மனிதனுக்கு, உழைப்பு உண்டு. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டு. உழைப்புக்கும் உழைப்பினால் படைக்கப்படும் பொருளுக்கும், பொருள் மதிப்பீட்டுக்கும் மதிப்பீட்டின் பயனுக்கும் உரிமை உடையவன் உழைப்பாளன், உழைப்பாளனிலிருந்து உழைப்பாளன் பொருள் அந்நியப்படுத்தப்படும் அநியாயம் பொதுவுடைமைச் சமுதாயத்தில் கிடையாது. பொதுவுடைமைச் சமுதாயத்தில் மனிதன்தான் மதிப்பிற்குரியவன். மனிதனுக்காகவே எல்லாம்!

பொதுவுடைமைச் சமுதாயத்தில் மனிதனின் உழைப்பை அற்பக் கூலிக்கு வாங்கும் முதலாளி இருக்க மாட்டான். உழைப்பாளியே படைக்கப்படும் பொருள் அனைத்துக்கும் உரியவன். பொதுவுடைமைச் சமுதாயத்தில் உழைப்பாளர்களே அனைத்துரிமைகளும் உடையவர்கள்.