பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இலாப வேட்டை இல்லை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். வரலாற்றுக் காலம் தொட்டு, உழைத்து அலுத்து எய்த்துக் களைத்துப்போனவர்கள்! பொதுவுடைமைச் சமுதாயத்தில் உரிமை பெறுகிறார்கள்! வாழ்வு பெறுகிறார்கள்!


எல்லைகளை எடு!

பாவேந்தன் பாரதிதாசன் உலக வரலாற்றைக் கூர்ந்து பார்க்கிறான். நூறாயிரம் வேற்றுமைகள் மனித குலத்திற்குள் - மதங்களின் பெயரால்! சாதிகளின் பெயரால்! ஏன் போரிடுவதே மண்ணாள்பவருக்கு வழக்கமாகி விட்ட வாழ்க்கை. பாவேந்தன் பாரதிதாசன் எண்ணற்ற வேற்றுமைகளைக் களைந்து உலக ஒருமையை உயர்த்திப் பாடுகின்றான்.


"உன்வீடு-உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு"

பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ! 'உலகம் உன்னுடையது 21-25)


வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே சுவர் எப்படி வந்தது! சுவர் வரவில்லை; சுவர் வைக்கப்பெற்றது. வீதிகளுக்கிடையே திரைகள்! நாடுகளுக்கிடையே எல்லைகள்! ஏன் எல்லைகள்? சுவர்கள்? என்று பாவேந்தன் பாரதிதாசன் கேட்ட வினாவிற்கு இன்று கிழக்கு ஜெர்மனி விடை தந்திருக்கிறது. ஆம்! கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி இவற்றைப் பிரித்து நின்ற சுவர் இடிக்கப் பெற்றுவிட்டது. ஏகாதிபத்தியம் வைத்த சுவரைச் சடசடவென மக்கள் எழுச்சி இடித்துவிட்டது! நமது நாட்டின் எல்லை - ஆம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லை எப்போது எடுபடும்? பாகிஸ்தான்-பாரத மக்கள் எல்லைகளைக் கடந்து