பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"அறிவை விரிவு செய்! என்றான் பாவேந்தன். ஆம்! பாவேந்தன் காலத்திற்கு முன்பும் அவன் காலத்திலும்கூட மனிதக் குலத்தை வருணங்களால், சாதிகளால் பிரிந்தவர்களே - குறுகிய புத்தியுடையவர்களே அறிஞர்கள் என்று அழைக்கப்பெற்றனர். "ஒரு குலத்திற்கு ஒரு நீதி” சொன்னவன் மனு! அவன் பாராட்டப் பெற்றான்! அதனால்தான், பாவேந்தன் பாரதிதாசன் குறுகாதே! குறுகியதெல்லாம் சின்னப்புத்தி! "அறிவை விரிவு செய்” அகண்டமாக்கு!" என்று ஆற்றுப்படுத்துகின்றான்! ஆம்! மக்களுடன் பழகு! வேற்றுமையின்றிப் பழகு! விசாலப் பார்வை வேண்டும். விசாலப் பார்வையிருந்தால் போதுமா? அனைத்தையும் போற்றி வளர்த்தல் வேண்டும், வாழ்விக்க வேண்டும். கடைசியாக மணிமுடியாக

"உலகம் உண்ண உண்! உடுத்த உடுத்து"

என்று அறம் வகுத்து உணர்த்துகின்றான்! இதுவே, இன்றைய மனித அறம்! இந்த அறநெறி கால்கொள்ள உடைமை பொதுவாக வேண்டும். இதுவே, பாரதிதாசனின் இலக்கு! நாம் என்ன செய்யப் போகிறோம்?

2. பாரதிதாசனின் குடும்ப விளக்கு

இனிய அன்பர்களே,

பெருமைக்குரிய துணைவேந்தர் டாக்டர் வேங்கட சுப்பிரமணியம் அவர்களே!

புரட்சிக் கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன் பிறந்த மண்ணில் அவனுடைய நூற்றாண்டு விழாச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி; கடப்பாடு!

முன்னுரை

நமது தலைமுறையில் தோன்றி நம்மிடையில் வாழ்ந்த தலைசிறந்த கவிஞன் பாவேந்தன்! பாவேந்தன் எண்ணற்ற-