பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எல்லார்க்கும் கல்வி

மக்களின் நல்வாழ்வுக்கு முதல் தேவை கல்வி. எல்லாரும் கற்க வேண்டும். கற்றவர்கள் முகத்தில் இருப்பனவே கண்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பன புண்கள் என்றது வள்ளுவம். எல்லாருக்கும் கல்வி நல்க வேண்டும். கல்வி பயிலும் வாய்ப்பில்லார்க்குக் கல்வியை வழங்காத ஊரவரைக் கழுவேற்றிட வேண்டும் என்பது பாவேந்தன் கருத்து.

"கல்வி நல்காக் கசடர்க்குத் துரக்குமரம்
அங்கே உண்டாம்"

(பாண்டியன் பரிசு)

கல்வியைப் பொதுவாக்க வேண்டும் என்பது பாவேந்தனின் ஆற்றல் நிறைந்த குறிக்கோள்.

"கல்வியைக் கட்டாயத்
தால் நல்கி யாவர்க்கும்
நல்லுடலை ஓம்ப
நனியுழைத்தால் அல்லலுண்டோ?"

(குடும்ப விளக்கு-பக். 63)

என்பது பாவேந்தனின் பாட்டு. எல்லாருக்கும் கல்வி தேவை. உடல்நலம் தேவை: உடல்நலத்திற்கு உழைப்புத் தேவை. இன்று, கல்வி பொதுவாக்கப்பட்டுவிட்டது! ஆனால், கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்வியில் போதிய அக்கறை காட்டப்பெறவில்லை. நாட்டின் எதிர்காலம் இன்றைய ஆரம்பப் பாடசாலைகளிலேயே உருவாகிறது. பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின்போது ஆரம்பக் கலவியின் தரத்தை உயர்த்த வேண்டும்; அறிவாக்கத்திற்குச் செயற்பட வேண்டும்.

"கல்வியைக் கட்டாயத்தால் நல்கி" என்பது கவிஞனின் வாக்கு நாட்டுத் தொண்டில் முதல் நிலையில் இடம் பெறுவது கல்வியேயாம்! நம்நாடு விடுதலை பெற்ற பிறகு எல்லாருக்கும் கல்வியளிப்பது என்ற வழியில் நீண்டதூரம்