பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாய்ந்த எழுத்துக்கள்வாத்திச்சியாக இருந்து பாடம் கற்பிக்கிறாள்; சங்கத் தமிழ்ப் பாடல்களைக் கற்பிக்கின்றாள் அவள், இதனை,

தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை"

(குடும்ப விளக்கு-பக். 8)

என்று விளக்குகிறான் பாவேந்தன்.

வீட்டின் படுக்கை அறை. குடும்பத் தலைவனும் தலைவியும் கலந்துரையாடல் செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறனர். அந்த நேரத்திலும் அந்தச் குடும்பத் தலைவிக்கு நாட்டுத் தொண்டு, தமிழ்த் தொண்டு பற்றிய எண்ணம் அலைமோதுகிறது. கணவனை நோக்கித் தலைவி கேட்கிறாள்.

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்,
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்!
எப்போது தமிழனுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை.
அனைவருமிவ் வாறிருந்தால் எதுத டக்கும்?

(குடும்ப விளக்கு - பக். 31)

என்று கேட்கிறாள். ஆம் நல்ல கேள்வி! இன்றும் நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!

அரசியல் சட்டப்படி எங்கும் எதிலும் இடம் பெற வேண்டிய தமிழ். இன்று எங்கு இடம் பெற்றிருக்கிறது? மேடைகளில் தமிழ் நன்றாக வளர்கிறது, இது போதுமா? ஆலயங்களில் தமிழ், தான் பெற்ற இடத்தைக்கூடக் காத்துக் கொள்ள முடியவில்லையே! பயிற்சிமொழி தமிழ் என்று அறிமுகப்படுத்தப் பெற்று, அரை நூற்றாண்டாயிற்று. என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 1971-இல் கலைஞர், தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த பொழுது தமிழ்வழியாகக்-