பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊற்றப்பெரும் தண்ணீர்! தமிழ், வாழ்வுக்குரிய மையம்! ஊர்! தமிழ், தமிழ் மக்களின் உரிமைக்கு வேர் போன்றது. வேரற்ற மரம் வளர இயலுமா? வாழுமா? தமிழ் மொழி பயிலாத தமிழினத்தின் உரிமைகள் பறிபோகும். தமிழ்ச் சமூகம் நாளும் புதிய விளைவுகளைப் படைத்திடத் தமிழே துணை! தமிழ் உயிர்! தமிழ் நலம் காப்பதே உயிருடைமைக்கு அடையாளம் !

"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, பக்89)

என்பது உணர்க!

தமிழின் சுகம்

தமிழ்ச் சுவைக்கு இணை எதுவும் இல்லை! காதல் சுகமா? ஆம்! அதுவும் ஈடில்லை என்கின்றான் பாவேந்தன்.

"மங்கை யொருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழுக் கிடில்லை என்பேன்"

என்பான். அனைத்து நலன்களும் பெற்ற பாவையாயினும் தமிழறியாப் பாவை, தமிழருக்குப் பாவையல்ல, வெற்றுடலேயாம் என்றும் பேசுகின்றான்.

"இருளில் இட்ட இன்ப ஒவியம் அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்