பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

391


பிறகும் தமிழ் அழியவில்லை; தமிழ் வளர்கிறது; தமிழ் வாழ்கிறது

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்போம்!

"புனற் கடலும் புகைக் கடலும் என்ன செய்யும்" என்று பாவேந்தன் கேட்கின்றான். ஏழாம் நூற்றாண்டில் வைகைப் புனல் வெள்ளத்தையும் மதுரையில் எரிந்த எரி நெருப்பையும் புறங்கண்டு தமிழ் வெற்றி பெற்ற வரலாற்றை இங்கு நினைவிற்கொள்க!

இன்று தமிழகத்தில் தமிழில் வழிபாடு இல்லை! ஏன்? தமிழ் மந்திர மொழி இல்லையாம். தமிழ், பயிற்று மொழி இல்லை! ஏன்? தமிழில் அறிவியல் இல்லையாம். இவையெல்லாம் தமிழர் அயர்ந்துள்ள நிலையில் நடக்கும் அவலங்கள்! தமிழில் மந்திரங்கள் உண்டு! இல்லை, தமிழே மந்திரமொழி என்பதைத் தமிழகத்தின் ஏழாம் நூற்றாண்டு வரலாறு கூறுகிறது. திருவிளையாடற் புராண ஆசிரியர்,

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்!”

(திருவிளையாடற்புராணம், திருநாட்டுச்சிறப்பு பக்.58)

என்று தமிழின் மாண்பினை எடுத்துரைக்கிறார்.

பாவேந்தன் கேள்வி, தமிழுக்குத் தொடர்பில்லாத கடவுள் ஏன்? என்பது. தமிழில் இல்லாத ஒன்று தமிழருக்கு ஏன்? எவன் அன்று எழுப்பும் வினாவிற்கு விடை கூறுவார் யார்?

எல்லாரும் தமிழ்க் கல்வி - தமிழ் வழிக் கல்வி கற்கவேண்டும். தமிழ் வழிக் கல்வி பயின்றால்தான் அறிவு வளரும் அறிவு வளர்ந்தால்தான் துன்பங்கள் நீங்கும், சுகம்