பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அம்முயற்சி கைவிடப்பட்டது. இன்றைய நிலை மேலும் மோசமாகி விட்டது! தமிழ்நாடு, தமிழர் நலம், தமிழின் நலம் ஆகியவற்றில் அக்கறையுடையவர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தீர்வுகாண வேண்டிய சிக்கல் இது.

செய்ய வேண்டியவை

தமிழ் நூல்கள் நிறைய வெளிவருதல் வேண்டும். எளிய நடையில் ஏற்றம் தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ் நூல்கள் பலப்பல படைத்திடுதல் வேண்டும். நாளும் இலக்கிய மரபுகள் மாறுகின்றன. புதிய கவிதைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இலக்கியங்கள் வாழ்க்கைப் போக்கில் வளர்ந்து வருகின்றன! இந்தப் புத்திலக்கியங்கள் யாப்பியலுக்கு ஒத்துவராதவை என்பது வெளிப்படை! அதனால் இவை அனைத்தையும் இலக்கியங்கள் அல்ல என்று ஒதுக்க முடியுமா? ஒதுக்குவது நல்லதா? ஒதுக்க இயலாது; ஒதுக்கவும் கூடாது. தோன்றும் இலக்கியங்களுக்குத்தான் இலக்கணங்கள்! ஆதலால் சமுதாய நிகழ்வுகளின் தாக்கத்தின் காரணமாக உணர்வுகளால் உந்தப்பட்டு எழுச்சியுடன் வரும் கவிதைகளை மரபுவழி ஒத்தவையல்ல என்று தள்ள இயலாது. இதோ சில உதாரணங்கள்:

“.......................... இனியும் சகிக்க முடியாது, கண்ணிர்க் கடலடியில் உறங்கிக் கிடக்கும் வட முகாக் கினியை உசுப்பி விடுவோம் வாருங்கள்” ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திர விதைகளைத் தூவுவோம் இங்கே!" ('பால்விதி' பக்.91, அதுல்ரகுமான்)