பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/427

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

415


ஆதலால் அவர் தமது இணையற்ற இலட்சியமாக சமதர்ம சமுதாய அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை அவருடைய படைப்புகள் தெளிவாகப் பேசுகின்றன.

மனித சுபாவம் என்பது இயற்கையுமில்லை; தெய்வமுமல்ல. அது சூழ்நிலையால் உருவாகி வளர்வதேயாகும். இதனைத் திருவள்ளுவரும் 'இனத்துள்ளதாகும் அறிவு' என்றார்.

குமாரைப்பற்றி அவன் ஏழை - அவன் நிதியை எடுத்து ஏப்பம் விட்டுவிடுவான் என்றும், அது ஏழைகள் சுபாவம் என்றும் செல்வச் சீமான் பார்த்தீபன் சொல்லுகின்றான். அறிஞர் அண்ணா தமது அருமையான படைப்பாகிய பார்வதியின் மூலம் உயிரோட்டமுள்ள உணர்வுடன், குபேரபுரியின் வாதத்தை எதிர்த்து, வாதாடுகிறார்.

"அந்தச் சுபாவம, பணக்காரத் தன்மை ஒருபுறமும் வறுமை மற்றோர் புறமும் இருப்பதால்தான் உண்டாகும் பனியிலே குளிருண்டாகும். வெய்யில் உடல் எரிச்சலைத் தருகிறது. வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனையூட்டி அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது.

தர்ம பிரபுக்கள் என்று சிலரும், தரித்திர பூச்சிகள் என்று பலரும் இருக்கும் வரையில் சுபாவமும் அந்தப் பொருளாதார நிலைக்கு ஏற்றபடிதான் அமையும். அது குமாரின் குற்றமல்ல. மேலும் குமாரின் சமதர்ம பற்று ஆழமானது" என்று வழக்காடுகிறாள் பார்வதி.

அண்ணாவின் படைப்பில் உத்தமி மிதவாதப் போக்குடையவள். அவள் விதியை நொந்து கொள்கிறாள். அவள் உலகத்தின் போக்குக் கண்டு சமாதானம் செய்து கொள்கிறாள். "மழை பெய்யும் போது ஊருக்கெல்லாம்