பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/433

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

421


மக்கள் மன்றத்தின் சென்ற காலத் தீர்ப்பு. இந்த வரலாற்றுத் திருப்பம் நம்முடைய தமிழகத் திருமடங்களில் - தமிழர் திருமடங்களில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மக்களை நாடி வரத் தொடங்கிவிட்டனர்; பேரவை கண்டுள்ளனர்; மக்கள் நலங்கருதிப் பேரறங்களைச் செய்ய முன்வந்துள்ளனர். இது தமிழகச் சமய வரலாற்றில் புதிய அத்தியாயம்.

இந்த அத்தியாயத்தை இன்டயீடின்றி இன்பமே சூழ. எல்லோரும் வாழும் வகையில் எழுதி முடிக்க வேண்டும் இந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழக அரசு இருப்பது சமய சீர்த்திருத்த உலகத்துக்குப் 'பெய்யெனப் பெய்யும் மழை' என விளங்குகிறது.

மறைமலை அடிகள் அவர்களும் தமிழ்த் தந்தை திரு. வி. க. அவர்களும் இன்ன பிற சான்றோரும் பக்தி நெறியை, கண் மூடிப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க முயன்று சூழலைச் சீராக்கியுள்ளதால் பகுத்தறிவு இயக்கத்தினரும் பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்த தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாழ்வுக்கு உதவாத வறண்ட பழைமையைத் தாக்கி வலுவிழக்கச் செய்துள்ளனர்.

இந்த இருமுனைத் தாக்குதலால் வறண்ட பழைமை. கல்லறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோது இருபாற் கருத்துக்களையும் ஒன்றாக்கி எழுதிச் செயல் படுத்தித் தமிழ்ச் சமயத்தையும், சமுதாயத்தையும் காப்பாற்ற முடியும்.

மாணிக்கவாசகப் பெருமான் எடுத்துக் கூறியதைப் போல "முன்னைப் பழைமைக்கும் பழைமையதாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய்” என்ற நிலையில் நமது சமயத்தினை விளங்கச் செய்யவேண்டும்.

அறிஞர் அண்ணா 'துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்' என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கிணங்கத் துன்பத்தில்