பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொழுதை விடியச் செய்வோம்

435


போதுமான பொருளும் வந்து பொதுப்பணியில்
நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக் கூட்டாளிகள்
சரியில்லை”

பொதுப் பணியில் நினைவிருந்தபோது செலவழிக்க பணமில்லை! மெள்ள மெள்ளப் பணம் சேர்த்தார். சேர்த்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் இப்போது அவருக்குப் பொதுப்பணியில் நினைவில்லை. இவருக்குப் பணம் சேர்வதற்கு முன் பொதுப்பணியில் முன் வரிசையில் நின்றார். நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது. இப்போது பணம் சேர்ந்தபிறகு, பொதுப்பணியில் நாட்டம் இல்லை. ஒதுங்குகின்றார்; ஒதுக்குகின்றார். இத்தகையோர் சிலரைச் சந்தித்திருக்கின்றோம். இப்போது ஒரு முரண்பட்ட நிலை! போதுமான பொருள் இருக்கிறது. பொதுப்பணியில் ஆர்வமும் இருக்கிறது. திட்டம் தீட்டவும் தெரிகிறது. ஆனால் திட்டத்தை நிறைவேற்ற நல்ல பொதுப்பணியில் நாட்டமுள்ள, கடின உழைப்புள்ள கூட்டாளிகள் கிடைப்பதில்லை. அல்லது கூட்டாளிகள் சரியில்லை. இது இன்றைய நம்முடைய நாட்டின் யதார்ந்த நிலைமை மட்டுமல்ல, படிப்பினையும்கூட! ஒரு ஊரில் சிலராவது பொதுப் பணிக்கென்று சிலமணி நேரங்களை ஒதுக்கினால் தான் திட்டங்கள் வெற்றிபெறும்; ஊர் வளரும்.

உலக வரலாறும் சரி, இந்திய வரலாறும் சரி மதச் சண்டைகளால் அவலங்களைக் கண்டிருக்கின்றன. அவலங்களைக் கண்டு கொண்டிருக்கின்றன. பட்டுக்கோட்டை கடவுள் பெயரால் மக்கள் சண்டை போட்டுக் கொள்வதை விரும்பவில்லை. விரும்பாதது மட்டுமல்ல, வெறுத்தான். அதனால் "ஊருக் கெல்லாம் ஒரு சாமி!” என்றொரு கவிதை இயற்றினான். ஊருக்கெல்லாம்-அவன் இந்துவானாலும், முஸ்லிம் ஆனாலும், கிறித்துவன் ஆனாலும் எல்லாருக்கும்