பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/477

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

465


வெட்கித் தலை குனிய வேண்டிய அளவிற்குள்ளது. நமது சமூகத்தில், மகளிர் விடுதலைக்கென்று முதற்குரல் கொடுத்தவன் பாரதி, அவனைத் தொடர்ந்து பாவேந்தனும் மகளிர் விடுதலைக்காகப் பாடுகிறான். நமது சமூகத்தில் மகளிர் நிலை, நேற்றைக்கு இன்று பரவாயில்லை. சற்றே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், மகளிர்க்கு இழைக்கும் கொடுமைகள் ஒய்ந்துவிட்டன என்று சொல்ல முடியாது. மகளிர் விடுதலை குறித்துப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்தார்; மகளிர் நலத்திற்கென எழுதினார்.

புதுமைப்பித்தனின் 'நினைவுப் பாதை' என்ற படைப்பில் வைரவன் பிள்ளை வருகிறார். அவருடைய மனைவி வள்ளியம்மை ஆச்சி, 50 ஆண்டுக்காலம் இல்லறத்தில் வாழ்ந்திருக்கின்றார். ஆயினும் வைரவன் பிள்ளை, வள்ளியம்மை ஆச்சியைப் பற்றிப் பிரமாதமாக நினைத்தது கிடைத்தது. இதனைப் புதுமைப்பித்தன் கேலி செய்வதைக் கேளுங்கள்!

"மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகி விட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்துவிரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?"

-(புதுமைப்பித்தன் சிறுகதைகள் பக். 408)

பகை என்பது ஒருவர் பிறிதொருவரிடத்தில் மனம் மாறாத நிலையில் காட்டுகின்ற வெறுப்புணர்ச்சியைக் குறிப்பது. இந்தப் பகையுணர்ச்சி ஒரு பொழுதும் தனி மனிதனுக்கும் நன்மை செய்யாது; சமூகத்திற்கும் நன்மை செய்யாது.

அதனாலேயே வள்ளுவம், 'பாழ் செய்யும் உட்பகை' என்கிறது. கம்பன் 'யாரோடும் பகை கொள்ளலன்' என்றான். ஆம்! நம்முடைய பகைவன், நம்மாட்டுப் பகை