பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

57


இவர்கள் திருந்தும் நாள் எந்நாளோ? அல்லது வையகம் சிறியெழுந்து திருத்தும் நாள் எந்நாளோ? தவம் என்றால் உண்ணாதிருத்தல், உறங்காதிருத்தல், வாழ்க்கை இன்பங் களை நுகராதிருத்தல், ஒதுங்கியிருத்தல், கண்மூடி மெளனி யாயிருத்தல் என்றெல்லாம்.சொன்ன தவநெறியினை பாரதி மறுக்கிறான். பாரதி, எந்த வகையிலும் வறட்சித் தன்மையுடைய துறவை, சமுதாயத்தை விட்டு விலகியோடும் துறவை விரும்பினானில்லை. பெண்மையை இழிவென்று துறக்கும் துறவுக் கொள்கையை விவாதம் செய்து மறுக்கிறான். கடவுளர்கள்-சிவன், திருமால் போன்றவர்கள். மணம் செய்து கொண்டது தவறா? என்று கேட்கிறான். இங்ங்ண்ம் தவம் செய்தவர்கள்கூட உயிர்த் துன்பம் நீக்கவில்லையே என்று நினைந்து சாம்புகிறான். எனவே, பாரதி இத்துறையிலும் புதுமை காணும் யுக சந்திப்புக் கவிஞனாக விளங்குகிறான். இன்று நாட்டில் எத்தனையோ பேர் எது நல்லது? எது கெட்டது? எது இனியது? எது துன்பம்? எது வாழும் வழி? என்றெல்லாம் அறியாமல், அறிந்து கொள்ள முடியாமல் திகைத்துத் தேம்பி நிற்கின்றனர். நாள்தோறும் இவர்கள் சிலரைச் சந்தித்து இனிய சொற்களால் நல்லன எடுத்துக்கூறி, அவர்களுக்கு உரிய இன்பம் பயப்ப்னவாகிய நன்மைகளைச் செய்தல் தவம் என்கிறான். இல்லை, பெருந்தவம் என்கிறான். கிருதயுகத்தின் தவம் இதுவேயாம்.

புண்ணியம் எது? புண்ணிய மூர்த்தி யார்? இந்தக் கேள்வியை கலியுக மனிதனிடத்தில் கேட்டால் விடை விநோதமாக இருக்கும். யார் எத்துன்பத்தை அனுபவித் தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாது ஆண்டவன் திருக்கோயில் முன்றிலிலேயே பிச்சைக்காரரை வாழவிட்டு பிச்சையெடுத்தும் வாழவும் முடியாமல் ஒரு முழக்கயிற்றைத் தேடி நான்று கொள்ளும் அளவுக்கு வையகத்தின் துன்பம் ஆர்: பக்கத்திலிருக்கும் மனிதன் புழுவாய்த் « Vo}. 5. - - -