பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எங்குப் பார்த்தாலும் வேலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சி! விடுப்பு வியாதி உழைக்காமல் வாழும் ஆசை வளர்ந்து நாட்டில் வறுமை வளர்ந்து கொண்டிருக்கிறது. இது, பாரதிக்குச் சற்றும் பிடிக்காத ஒன்று. பாரதி நூற்றாண்டில் புதிய எழுச்சியினைப் பெறுவோமாக! உடலுக்கு நோய் வந்தாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு உழைக்க வேண்டுமே தவிர, தலைசாய்த்துப் படுக்கக்கூடாது. இது பாரதியின் ஆணை! பாரதியின் ஆணையை இந்த நூற்றாண்டிலிருந்து செயலாக்குவோமாக!

நாடு வளர கருத்து வளர்ச்சி தேவை. மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குரிய கருத்துக்கள் எல்லாப் பகுதிகளிலும் எல்லா மொழிகளிலும் தோன்றலாம்; தோன்றும். கருத்துக்களைத் தேர்ந்தெடுப்பதில் எல்லைக் கோடுகள் வைத்துக் கொண்டால், சமுதாயம் தேக்கமடையும். வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் அருகும்; உயிர் சுருங்கும். இது கூடவே கூடாது. மனித உலகம் சொல்லியும் கேட்டும் வாழ்ந்தால்தான் வளர முடியும். அறிந்ததைச் சொல்லுதலும் அறியாததைக் கேட்டறிந்து கொள்ளுதலும் வாழ்க்கையின்பொறிகளின் அமைப்பு அறிவை வளர்க்கவும், அறியாமையை அறிவாக மாற்றி வளர்க்கவும் வாயும் செவிகளும் பயன்படவேண்டும். இன்று நூற்றுக்கு எழுபத்தைந்து பேருக்கு இந்த வகையில் பொறிகள் பயன்படுவதில்லை, ஊமையும் செவிடும் சேர்ந்தால் என்ன ஆகும்? பயங்கரமான தீமை! அதுபோலத்தான் இன்றைய மக்கள் சேருகின்றனர்; கூடுகின்றனர். இது தவறு. காசியில் சொல்லப்படும் ஒன்றைக் காஞ்சியிலிருப்பவர்கள் கேட்க விரும்ப வேண்டும். அங்ஙனம் கேட்டறிந்து கொள்ள மொழியோ, இனமோ தடையாய் அமைதல் கூடாது. காசியும் காஞ்சியும் பல்கலைக் கழகங்கள் அமைந்து விளங்கிய பெருநகரங்கள். காசி, வடபுல நகரத்தின் தலைநகரம், காஞ்சி, தென்புல நகரத்தின் தலைநகரம், கங்கையும் காவிரியும் இணைந்தால் போதாது. இவ்விரு