பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அப்போது மானிட சாதி படைப்பாற்றல் உடையதாக விளங்கும். உலகின் துன்பத்திற்குக் காரணமாக இருப்பவைகளை மானுடம் வென்று விளங்கும். அப்போது உலகு இன்பக்கேணியாக மாறும்.

பாரதியின் நூற்றாண்டு நினைவு பெறவிருக்கிறது. அவனுக்கு இந்த நாடு என்ன செய்திருக்கிறது! ஒன்றும் செய்யவில்லை. பாரதியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுக்க வேண்டாமா? ஆம்! கொடுத்தேயாக வேண்டும். ஒரே கடவுள் நம்பிக்கை கொள்ளுவோம்! மதவேற்றுமைகள் பாராட்டாது ஒழுகுவோம்! சாதி வேற்றுமைகளை அடியோடு நீக்கி ஒரு குல உணர்வை வளர்க்க வேண்டும். இந்த உலகைத் துன்பமானது என்று பாடிய கவிஞர் வரிசையில் வந்தவனல்லன் பாரதி. புதுமைத் திறம் பாடியவன்; இந்த உலகை இன்பக்கேணியாக எண்ணிப் பாடியவன். நாம் இன்பக்கேணியாக அமைக்க வேண்டாமா?

"ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி"


சிந்தனையில் தெளிவு தேவை !

உலகு இயங்குகிறது. மனிதகுல வரலாறு நடக்கிறது. நடந்து கொண்டேயிருக்கிறது. மனிதகுல வரலாறு பொருளுடையதாக, பயனுடையதாக அமைவது மானிட சாதியின் சித்தத்தைப் பொறுத்தது. வாழ்க்கையை உந்திச் செலுத்தும் மனிதனின் மனம் எதையும் பற்றும். புற உலகிற்கும் அக உலகிற்கும் இடையில் உள்ள வாயில் மனமே. மனம் அடைபட்டிருந்தால் செய்திகளின் வாயில்கள் அடைபட்டுப் போகும். அதனால், மனம் தன்னலம் மிக்க மிருகத் தனமான குணங்களுடன் விளங்கும் அல்லது பொதுமையற்ற, அருள் நோக்கமில்லாத ஆயினும் பயனற்ற தூய்மையும் தவமும் உடையதாக விளங்கும். இவ்வேறுபாடுகள் உயிரியற்