பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்கள், மக்களையோ அரசு அலுவலர்களையோ அணுகும் போதெல்லாம் தனித் தோரணைகள்! ஏன், இந்த நிலை: அரசுகளுக்கு ஏது பணம்? அவர்கள் என்ன நிலையான அதிகாரம் பெற்றவர்களா? ஒன்றும் இல்லை. ஆனாலும், மக்கள் பயப்படுகின்றனர். சாதாரண மக்கள் மட்டுமா பயப்படுகின்றனர்? அறிஞர்கள்கூட அஞ்சு கின்றனர்! இங்ஙனம் பலர் அஞ்சுவதை ஆட்சியாளர்கள் வரவேற்பது அவர்களுக்கும் நல்லதல்ல. மக்கள் அஞ்சி வாழ்தலும் நல்லதல்ல.

"அச்சமே கீழ்களது ஆசாரம்” என்று திருக்குறள் கூறும். ஆட்சிக்கு அஞ்சுவதால் தவறுகள் சுட்டிக் காட்டப் பெறுவதில்லை. அதனால், தவறுகளே நியாயங்களாகி விடுகின்றன. அஞ்சி வாழ்வதால் தெளிவும், ஆண்மையும் நாளடைவில் மங்கிப்போய்ப் பிண வாழ்க்கை வந்தடைகிறது. ஆதலால், அச்சம் தீது! யார் மாட்டும் அச்சம் தீதே! ஆதலால்தான் "அச்சம் தவிர்” என்று பாரதி கூறினான்.

அச்ச உணர்வு தோன்றுதற்குரிய களங்கள் என்னென்ன? ஆசையிலிருந்துதான் அச்சம் தோன்றுகிறது. தவறுகளுக்கெல்லாம் ஆசைதான் மூலகாரணம். அப்படியானால் ஆசையில்லாமல் துறவிகளாக வாழ்ந்தால்தான் அச்சமின்றி வாழ முடியுமா? அப்படி இல்லை. தனக்குத் தகுதியுடையதல்லாத ஒன்றைக் குறுக்கு வழிகளில் - முறைகேடான வழிகளில் அடைய முயல்வதற்கு ஆசை என்று பெயர். நன்றாக உழைத்து, உழைப்பால் உறுபொருள் ஈட்டினால் அப்பொருள் அச்சத்தைத் தராது; இன்பத்தைத் தரும். குறுக்கு வழிகளில் பொருள் ஈட்டினால் அப் பொருளைத் துய்க்கவும் முடியாது; அச்சமே ஆட்கொள்ளும்.

ஒரு பெண்ணைக் காதலித்து, அவளுக்கு இன்ப மூட்டித் தான் இன்புறுதல் ஆசையன்று. இரவலனாகவும் பாவியாகவும் கடவுள் முன்னால் நின்று அழுது தொழுதல் அச்சத்தின் வழிப்பட்டது. ஆதலால், அச்சமில்லாத