பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24
பரவும் முறையைப் பயில்க!

அறிவியல், தத்துவம் மட்டுமல்ல. அஃதொரு செய்முறை. விதிமுறைகளைப் பிசைந்து செய்யும் செயல்கள் அறிவியற் பயனைக் கூட்டுவிக்கும். இது பருவுலகில் காணப்படும் காட்சி.

அதுபோலவே, நுண்ணியலைச் சார்ந்த அறிவியலும் உண்டு. அதன் பெயர் சமயம். உயிர் நுண்பொருள். கடவுள் நுண் பொருள். இவை இரண்டைப் பற்றியும் திறனாய்வு செய்யும் தத்துவக் கொள்கைக்குச் சமயம் என்பது பெயர்.

உயிர் - கடவுள் இரண்டும் நுண் பொருளானாலும் இவை இரண்டுமின்றி உலகின் பருப்பொருள்கள் பொருளுடையனவாதலில்லை; பயன்படுதலும் இல்லை. நுண் பொருளுக்கும் பருப் பொருளுக்கும் உறவு ஏற்படுத்தி ஒன்றோடொன்று தொடர்புண்டாக்கி ஒன்றின் குறையைப் பிறிதொன்றின் மூலம் நீக்கி நிறை நலம் நல்குதல் வாழ்வியலின் அடிப்படை.

இந்த அடிப்படையை ஆராய்ந்து இருவேறு நுண் பொருள்களாக இருக்கின்ற கடவுள் - உயிர் இவ்விரண்டி