பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவற்றின் வலையில் வீழாமல் திருவாரூரில் எழுந்தருளியுள்ள கற்பகத்தைப் பற்றிக் கொள்வது பாதுகாப்பு.

விரைந்தாளும் நல்குரவே, செல்வே, பொல்லா
வெகுட்சியே, மகிழ்ச்சியே, வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம்! யானோ வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்றும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே!

(6.27.8)

என்ற பாடல் நினையத் தக்கது.

ஐம்பொறிகள் இயல்பாக நல்லவையே. ஆயினும் முறையாகப் பழக்கப்படாத ஐம்பொறிகள் தீமையே செய்யும். ஐம்பொறிகளை அப்பரடிகள் “வஞ்சப் பொறிகள்” என்று கூறுகிறார். ஏன்? எதனால்? நல்லன செய்தல் போலத் தீமை செய்தலால் ‘வஞ்சப் பொறிகள்’ என்றார், ஐம்பொறிகளை.

புண் சுமந்த விலங்கின் உடலினை, நோய் ஏற்படும் வகையில் கொத்தித் தின்னும் காக்கை போல்வன என்று கூறுகிறார். ஆம்! ஐம்பொறிகளுக்கு நமது துன்பம் தெரியாது! தெரியாது! அதனால், “மூள்வாய தொழிற் பஞ்சேந்திரிய வஞ்ச முகரி காண்” என்றார்.

நாள்தோறும் ஐம்பொறிகள் நடத்தும் ஆட்சியை “மம்மர் ஆட்சி” என்றார். ஐம்பொறிகளின் வழியில் வீழாது தடுத்து, காப்பாற்றிக் கொள்ள, பற்றிக் கொள்ளும் நெடுந்தூண், திருவாரூர் ஆளும் நெடுந்தூண் என்றார்.

மூள்வாய தொழிற் பஞ்சேந் திரிய வஞ்ச
முகரி காண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள் வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே! யானேல் வானோர்