பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கங்கைவார் சடைக்கரந்தார்க்
கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும்
கடவுளாரே!

என்றார். தாம் வணங்குகின்ற கடவுள் என்று சொல்லுகின்ற அளவில் நாம் அந்தப் பாடலைப் பார்க்கிறோம். ஒப்புயர்வற்ற சமுதாய ஒருமைப்பாட்டை, சாதிகுல கோத்திரங்களுக்கு அப்பாற்பட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது அப்பரடிகளின் கருத்து.

‘கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராவோர்’ கருத்தில் அந்த ஆவும், ஆண்டவன் வீற்றிருக்கும் கோயில் என்ற எண்ணம்தானே உண்டாகும். பின்பு தாமாகவே அக்கொடுந்தொழிலை விட்டுவிடுவர். மேலும் கோவிலில் காணப்படும் வாகன நந்தியையும் நினைப்பர்.

சமயத்தில் சமதர்மம்

அடுத்து, எல்லாரும் வாழ வேண்டும்; இன்பமாக வாழவேண்டும். பொருள் உடைமை, பிறருக்குத் தந்து உதவி வாழ்விப்பதற்கே என்ற உயர்ந்த தர்மகர்த்தாக் கொள்கையை அப்பரடிகள் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டில், ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்ற ஒரு கொள்கை இல்லை. எனினும், தர்மகர்த்தாக் கொள்கைக்கு வித்தூன்றுவது போல அப்பரடிகள் பேசி இருக்கிறார்.

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார்.
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்

என்று கூறுகிறார். ஒரு பெரிய மருத்துவர் இருக்கிறார். அவர்தம் பெட்டியிலே இரு நூறு ரூபாய் மதிப்புள்ள நல்ல