பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கிறது. அப்பரடிகள் “உறவுக்கோல் நட்டு” என்று கூறுகிறார்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் துநீ
இறைவன்நீ ஏறூரர்ந்த செல்வன் நீயே!

இப்பாடலின் வாயிலாக அன்பின் படிமுறை வளர்ச்சியை அப்பரடிகள் நமக்கு உணர்த்துகிறார். அப்பாவிடத்திலே இருக்கிற அன்பைவிட அம்மாவிடத்திலே அன்பு கொஞ்சம் அதிகம்தான். அதன் பிறகு மாமியார், மாமனார் உறவு வருகிறது.

அன்புடைய மாமனும் மாமியும் என்று பேசுகின்றார். அன்பின் பரிணாம வளர்ச்சியை அப்பரடிகள் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

தாய்மொழி வழிபாடு

இந்தப் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடிய அப்பரடிகள் இறைவனையே உறவாகப் பார்க்கிறார். கடவுளைக் கடவுளாகப் பார்த்து, ஆடிக்கொருதரம் கும்பிடுவதால் பயனில்லை. கடவுள் உறவு இருக்க வேண்டும்; உடைமைப் பொருளாக இருக்கவேண்டும். இப்படி கருதுதற்குரிய உணர்வு நமது சொந்தச் சிந்தனையில் ஊறி வளர வேண்டும். பிற்காலத்தில் கடவுள் பக்தி அப்படி ஊற்றெடுக்கும் அளவிற்கு இல்லாமற் போயிற்று. அதற்கான உணர்வு வற்றிப் போய்விட்டது. கோயிலுக்குப் போனால் குருக்கள் கையில் இருக்கிற மணி ஒலிக்கிறது; பக்தர்கள்