பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34
சுந்தரர்

நம்பியாரூரர், சுந்தரர், ஆளுடைய நம்பிகள் என்றெல்லாம் போற்றப்பெறும் சுந்தரமூர்த்தி நாயனார் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு மையமாகத் திகழ்ந்தவர். செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் ஏற்றம் இருந்த காலம் அவர் காலம்.

நம்பியாரூரர் இறைவனைத் தம் அன்றாட வாழ்க்கையில் உடன் உறைவோனாகவே கொண்டார்; இறைவனோடு அளவளாவினார்; உகந்தும் கூடியும் பழகினார். அவர் ஏத்தியும் வழிபட்டார்; ஏசியும் உறவு கொண்டார். ஆயினும் எந்தச் சூழ்நிலையிலும் திரு ஆரூரானை மறக்கவில்லை.

வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

(7.54.1)

என்று பேசியவர் நம்பியாரூரர். ஆயினும் அவர் இறைவனிடத்தில் உருகிப் பேசிய இடங்களும் உண்டு. நிகழ்ச்சிகளும் உண்டு. -

இறைவனுக்கும் நம்பியாரூரருக்கும் இடையில் இருந்த உறவு, அறிவு எல்லைகளைக் கடந்தது. அவர்கள் உறவினைக் கலிக்காமராலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே! இப்-