பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

91


அமைச்சு வாழ்விற்குச் சென்றமையை எண்ணிப் பாடுகின்றாரா? வாழ்க்கையின் குறிக்கோள் ஆன்மாவைப் பூரணத்துவமாக்கும் தவ வாழ்க்கையை மேற்கொள்ளுதலேயாம். அஃதில்லாமல் அமைச்சு வாழ்க்கையை ஏற்றதை எண்ணி வருந்துகிறார் போலும்!

இனம், இனத்துடன் சேரும். இஃது இயற்கை மாணிக்கவாசகருடன் பலர் இருந்தனர். அவர்கள் மெய்யன்பர்கள், அவர்கள் சிவபெருமானிடம் எளிதில் சேர்ந்தனர்; மெய்ம்மை ஆயினர். ஆனால், மாணிக்கவாசகர் பின்தங்கி விட்டார்! ஏன்? இறைவனை அடைதலுக்கு மெய்ம்மை தேவை. மாணிக்கவாசகரிடம் மெய்ம்மை இல்லை. பொய்ம்மையே இருந்தது!-இது, மாணிக்கவாசகரின் சொந்த விமர்சனம்! உண்மை உணர்வது நமது கடமை. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையிலும் செயல் மாள விடவில்லை. திருப்பெருந்துறைத் திருக்கோயிலைக் கட்டினார். அல்லவா? அது ஒரு பணி! செயல்! ஆதலால், செயல் அடங்கவில்லை என்று எண்ணினால் தவறில்லை! தவக்கோலம்! பத்திமைப் பரவசம்!. ஆயினும், செய்வினைகளும் இருந்தன. வினை நீக்கம் பெற்ற வாழ்க்கை வந்தமையவில்லை. அதனால் ‘பொய்யிலங்கெனை” என்று கூறினார் போலும்.

இறைவன் மெய்ப்பொருள்; மெய்யன்பர்கள் மெய்ம்மை மேவினார். தகுதியுடையார்க்கு வழங்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது. தகுதி இல்லாதாரைத் தகுதியுடையாராக்கி ஆட்கொள்ளுதலே சான்றோருக்கு அழகு. தகுதி மிகுதியும் உடையோருக்குக் கடன். இறைவன் வெண்ணீறு சண்ணித்த மேனியன். இறைவன் ஏன் வெண்ணீறணிகின்றான்? ஆன்மாக்கள் தாம் செய்த வினைகெட நீறணிகின்றான். இது இயல்பு; மரபு. இயல்பிலேயே வினையின் நீங்கி விளங்கிய அறிவினன் இறைவன். அப்படியானால் இறைவன் உடம்பில் திருநீறு எதற்கு? இந்த வினாவுக்கு விடை திருக்கோவையார் தருகிறது. குழந்தைக்கு