பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

125



மனத்துணை யே!என்தன் வாழ்ழுத
லேஎனக் கெய்ப்பில் வைப்பே!
தினைத்துணை யேனும் பொறேன்
துயராக்கையின் திண்வ லையே!

(நீத்தல் விண்ணப்பம்-39)
அறியாது கெட்டேன்!

நோய்! புதிய நோய்கள்! உடல் நோய்! ஆன்மாவின் நோய்! ஏன் நோய்? எதனால் நோய்? காரணங்களைத் தேடின் மூச்சு வாங்கும்! ஓர் உண்மை புலனாகிறது! நோய்க்குரிய காரணங்களில் பழையன மட்டுமல்ல! புதியனவும் உண்டு! பழைய காலத்தில் அழுக்காறு என்ற நோய்க்குக் காரணம் உடைமைச் சார்புடையதாகவே அமைந்திருந்தது. இன்றோ புகழும் காரணமாக அமைந்திருக்கிறது! நோய் இயற்கையன்று! நோய்க்குப் பழ வினைகள் காரணமல்ல. நோய் செயற்கை, நோய் வரவேற்றுக்கொள்வது! நோய்க்கும் இவன் புதியவனே! சுவை நாடி உண்டமை, உழைப்பில்லாத வாழ்க்கை, தூய்மையற்ற உடல், தூய்மையற்ற மனம், கெட்ட புத்தி, அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஆன்மா இவையெல்லாம் நோய்க்குக் காரணங்கள்!

உலகம் முன்னேறுவது, நொடிகள் தோறும் முன்னேறுவது. ஒரு நொடிப் பொழுது அயர்ந்தாலும் உலகம் நெடுந்தொலைவு போய்விடும்! நாம் பின்தங்கி விட்க்கூடாது! துறை தோறும் முன்னேற்ற நிலை பராமரிக்கப்பெறுதல் வேண்டும். அறிவில் பிற்பட்டிருந்தால்- அறிவிருந்தாலும் உலக அறிவை நோக்க அறியாமையாகவே கொள்ளப்பெறும்! அறிவு வளர்வது; இடையீடின்றித் தொடர்ந்து வளர்வது! ‘அறி தோறும், அறியாமை’ என்று திருக்குறள் பேசும்! இன்றைய அறிவே அறிவு; வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் அறிவு; உழைப்பு உழைப்புத் திறன் வளரும் இயல்பினது. உடலியக்கத்