பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

133


நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தனது வாழ்க்கைக்கு இசைந்தது எதுவோ அதுவே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை நியதிகளுக்கும் நீதிகளுக்கும் சட்டங்கள் மாறுபடுகின்றன. ஏன்? மனிதனின் பலவீனத்திலிருந்தே சட்டங்கள் தோன்றின. அந்தச் சட்டங்களையும் மனிதன் இன்று மதிக்கத் தவறுகின்றான்.

இன்று எது நீதி? அவரவரும் நினைத்துக் கொண்டிருப்பதே ‘நீதி’ என்று கருதுகின்றனர். இன்று எங்கு நோக்கினாலும் நீதிக்கும் இயற்கை நியதிக்கும் முரண்பட்டவையே நீதியாகக் கருதப்படுகின்றன. பண்டு உலகத்தை இயக்கியது “வல்லாண்மை”யேயாம்! வல்லாண்மையுடையது வாழும். இது நியதி; நீதி! ஆனால், இயற்கையாய் அமைந்த சமயஞ் சார்ந்த நீதி, வல்லார்க்கு மட்டுமல்ல வாழ்வு, வல்லாண்மை இல்லாதாருக்கும் வாழ்வுண்டு, உரிமையுண்டு என்பதே. நீதிக்கு வேற்றுமை இல்லை; எல்லை இல்லை! காய்தல் இல்லை- உவத்தல் இல்லை! நீதி சார்ந்த வாழ்க்கைமுறை இன்பந்தரும். இந்த வையகத்திற்கு இன்றையத் தேவை நீதி சார்ந்த வாழ்க்கை முறையே!

சிவநெறி- சைவ நெறி தொன்மையானது. ஆதலால், சிவநெறி போற்றும் சிவன், நீதியாய் நிற்பவன்! இன்று பணம் பத்தும் செய்கிறது! இன்று பணத்தினால் விலைக்கு வாங்க முடியாதது ஒன்றில்லை! பணமும் அறிவுக் கூர்மையும் இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றன. பணமும் அரம்போல் கூர்மையான அறிவும் உடையவர்கள் இன்று நீதியையே விலை பேசுகின்றனர். ஆனால், சிவநெறி இயல்பு இதற்கு முரணானது.

சிவபெருமான் நீதியே வடிவமானவன்! சிவபெருமானை பணபலமுடைய திருமால் தேடியும் காண முடியவில்லை; நான்கு வேதங்களின் தலைவனாக அறிவின் சின்னமாக விளங்கும் நான்முகனாலும் தேடிக்கான