பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வரலாற்றையும் எண்ணும்போது வரும் கண்ணீர் வேறானது. இறைவன் தானே முன்னின்று ஆன்மாவின் வாழ்வியலில் நுழைந்து பக்குவப்படுத்தும் அருளியல் வரலாறு நிகழவும் முடியும் என எண்ணிச் சைவப் பெருமைத் தனி நாயகன் நந்தியின் அருளியலை வியந்து வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்.

மேற்கண்ட காரணத்தாலேயே அடிகள் மணிவாசகர் வரலாற்றை விளக்கும் போது பல வேறு நிலைகளில் நின்று விளக்கம் கூறுவதைக் காணலாம்.

மனிதன் வாழவேண்டும் என்று மட்டுமே நினைப்பதோடு அடிகளின் சிந்தனை நின்று விடாது. அவன் மானிடனாகவும் நல்லவனாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அவர்தம் சிந்தனைச் செழுமை. அதனால் பல்வேறு வாழ்வியல் எழுச்சிக் கருத்துகளை இடையிடையே அமைப்பார்.

சான்றாகச் சில:

கொடுங்கோன்மையும் ஆற்றலின்மையும்
பொய்யைப் பிறப்பிக்கின்றன. (29)
நிர்வாக இயலில் தொடர் கண்காணிப்பு
இன்றியமையாதது. (38)
உடல் பெருத்தால் உயிர் சிறுத்துவிடும்.
உடலின் ஊனைப் பெருக்குவது தீது.

உடல் ஊனை உருக்கி உயிரை வளர்ப்பது நல்லது. இதற்குக் கடவுளின் கருணை உண்டு. (36)

“இந்தக் கதைதான் ஆன்மாவின் கதையும்” என்று எடுத்துக்காட்டும் ‘பேபி’ என்ற நாயின் கதை. (68)

‘திருவாசக உவமைகள்’ என்ற தலைப்பில் அடிகள் கூறும் விளக்கங்கள்:

“பற்று விடுதல் என்றால் பற்றை ஒழித்துவிடுதல் என்பது பொருளல்ல; பற்றை வேறு திசையில் திருப்பி விடவேண்டும்.இதற்கு மடைமாற்றுதல் என்பது பெயர். நமது தேவைகள் பிறருக்கும் உண்டு என்று கருதித் திசைமாற்றி விடுதல் வேண்டும்”.

“வாழ வேண்டியவர்களைப் பற்றி எண்ணுமின்! அவர்களுக்குரிய நன்மைகளைப் பற்றி நினைமின்! அவர்கள்