பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பினை, மாணிக்கவாசகர் தம்முடைய அனுபவத்தின் மீதேற்றி விளக்குகிறார்.

ஒரு செல்வந்தரின் வீடு-தங்கம் தாராளாகப் புழங்கும் வீடு-ஒரு நாள், வீட்டுத்தலைவி சாமான்களை எண்ணிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அருகில் இருந்த அவளுடைய அருமைக் குழந்தை அங்கிருந்த பொருள்களில் ஒன்றாகிய தங்கக் கிண்ணத்தை விரும்பிக் கேட்டது. தாயும் கொடுத்தாள். குழந்தை தங்கத்தின் மதிப்பறிந்து கேட்கவில்லை. ஏதோ ஒரு பொருள். மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்; அது தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறது; குழந்தை அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கியதும் விளையாட்டுப் போக்கில் வீதிப்பக்கம் வருகிறது. அப்போது அது, தனக்கு மிக உவப்பான - பிடித்தமான கற்கண்டு கட்டிகளையோ, வைத்து விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்களையோ யாராவது தந்து தங்கக்கிண்ணத்தைக் கேட்டால் கொடுத்துவிடும். அதற்குத் தங்கக் கிண்ணத்தின் மதிப்புத் தெரியாது. பொம்மைகளைப் போட்டு உடைத்து விளையாடுவது போலத் தங்கக் கிண்ணத்தைப் போட்டு விளையாடவும் செய்யலாம். காரணம், அது அறியாக் குழந்தை.

அது போல,

இறைவன் உயிர்களுக்குக் கருணையினால் மாறிலாக் கருணையை வழங்குகின்றான். எனினும் பல உயிர்கள் அதைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்வதில்லை. இறைவன் கருணை நிறைந்தவன் என்பதையுணர்த்தும் வண்ணம். அவன் அம்மையப்பனாகவே விளங்குகின்றான். அவன் உயிர்கள் இருக்கும் இடம்தேடி, இல்லங்கள்தோறும் எழுந்தருளித் திருவடித் தாமரைகளைக்காட்டி ஆட்கொள்ளுகின்றான். மாணிக்கவாசகப் பெருமானையும், பெருந்