பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாடுகின்றார்கள். எனினும் அவர்களால் முடிவதில்லை என்ற கருத்தையும் மாணிக்கவாசகர் உணர்த்துகின்றார்.

“ஒன்று பரம்பொருள்-நாமதன் மக்கள்-உலகின்பக் கேணி” என்ற பெருவட்ட நோக்கோடு ஒருவரோடொருவர் ஒத்தும், ஒத்துழைத்தும் வாழ்ந்தால் நினைத்தவை கைகூடும்-இன்பமாக வாழலாம்-இறையருளைப் பெறலாம் என்பது மாணிக்கவாசகரின் கருத்து. இதோ பாடலைப் பாருங்கள்:

கடலினுள் நாய்நக்கி யாங்குன்
கருணைக் கடலினுள்ளம்
விடலரி யேனை விடுதிகண்
டாய்விட வில்லடியார்
உடலில் மேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேயமு
தேயென் மதுவெள்ளமே!

ஆன்மாவும் கொடியும்

உலகியலில் எந்த ஒன்றும் தனித்து இருப்பதில்லை. தனித்திருப்பது வளர்ச்சிக்கு இடையூறு-முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. இதே தத்துவம் சமய இயலுக்கும் பொருந்தும். உயிர் தனித்திருப்பதில்லை. உயிருக்குச் சார்பின்றித் தனித்திருக்கும் இயல்பும் ஆற்றலும் இல்லை. ஒன்று, உலகப் பொருள்களைச் சார்ந்து அவற்றை அனுபவிக்க வேண்டும்; அல்லது, இறைவனுடைய திருவருளைச் சார்ந்து திருவருளின்பத்தை அனுபவிக்க வேண்டும். இஃது உயிரின் இயற்கை உயிர் திருவருளைச் சார்ந்திருப்பது திருத்தத்திற்கும் உய்திக்கும் வழி வகுக்கிறது. அப்படியின்றி உலகியலை மட்டும் சார்ந்திருப்பது துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. உலகியல் வசப்பட்ட உயிர் எரியுள் அகப்பட்ட கட்டை போல அழிக்கப்படுகிறது. திருவருட்