பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

247


ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு
உன்தாள் இணையன்புக்
காராயடியேன் அயலே
மயல்கொண் டெழுகேனே!

–திருவாசகம்

இருகை யானை

சிவநெறி சிந்தைக்கினியது-உயிர்களுக்கு உய்வு தரும் நெறி மயக்கங்களினின்றும் விடுபெற்ற ஒருநெறி. சிவநெறி, தத்துவம் விளக்கும் சாத்திரங்களும் அருளார்ந்த அனுபவத்தைத் தந்து உயிர்களை விளக்கமுறச் செய்யும் திருமுறைகளும் பெற்றுத் திகழும் பெருநெறி.

சைவத் திருமுறைகளுள் மிகச் சிறந்தது திருவாசகம். திருவாசகம் ஒரு அனுபவப் பொதிவு-ஞானப் புலம்பல். அது, உணர்த்தும் நூலன்று-உணரச் செய்யும் நூல். அனுபவத்தைச் சொல்லும் நூலன்று - இன்ப அனுபவத்தை விளைவிக்கும் நூல். இத்தகு திருவாசகம் ஓதுவோரை உயர்த்தும்! திருவாசகம், சைவம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மூன்று பொருள்களை (இறை, உயிர், தளை)யும் தக்க உவமைகளுடன் காட்டி விளக்குவதில் சிறந்தது. ஆன்மாவை, உயிர் நெறியைப் பற்றித் திருவாசகம் காட்டும் உவமை இருகை யானையை ஒத்திருந்தும் என் உள்ளக் கருவைக் கண்டிலேன் என்பது, மாணிக்கவாசகர் வாக்கு. உவமை மிகமிக அழகானது.

யானை மிகப் பெரிய உடலையுடையது. ஆனாலும் இத்தகு பேருடலுக்குள் இருக்கும் உயிர் நிலையையோ உயிருக்கு உயிராக விளங்கும் இறைநிலையையோ தெரிந்து தெளியும் ஆற்றல் அதற்கில்லை. அது போலவே மனிதர்கள் அறிவாலும், வேறு பிறவற்றாலும், சிறந்த மனித உடம்பைப் பெற்றிருந்தும் தன்னைப் பற்றியே அறியாமல்-அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்துவிடுகிறார்கள். சீரிய சமய வாழ்வின் தொடக்கம் தன்னை அறிதலிலும் உணர்தலினுமே