பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சைத்தான் என்றே பேசுவார்கள். மற்றவர்களைப் பற்றி அறியாத செய்திகளை பேசுகிறோமே என்றும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் வருந்துவார்களே என்றும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டால் செத்துப் போகலாம் என்ற அளவு துயரத்தின் கொடுமுடிக்கு மாணிக்கவாசகர் செல்கிறார். ஆம்! அவருடைய வாழ்க்கையில் அரசை நன்னெறியில் நிறுத்துவதற்காகச் செய்த பணிகள் அன்று நீதிக்கு முரணானவை என்று எடுத்துக் கொள்ளப் பெற்றன. அன்றும் மாணிக்கவாசகர் என்ன நோக்கத்தில், ஏன் செய்தார்? என்று கேட்காமலேயே அரசும் அரசைச் சார்ந்த மக்களும் அவரைத் துன்புறுத்தினர். இன்றும் பகுத்தறிவு வாதிகள் அங்ஙனமே குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நாட்டின் அரசு போருக்கும் களியாட்டத்திற்கும் பயன்படும் குதிரைகளை வாங்குவதைவிட மக்களிடையே கலையை வளர்த்து, அருளியல் வழி இன்ப அமைதி தழுவிய வாழ்க்கையைப் படைத்தல் நன்று என்ற நோக்கத்தோடு மாணிக்கவாசகர் செய்தார். அவர் மனத்திலிருந்ததை அன்று புரிந்து கொண்டார் யார்? இன்றும் நாத்திகம் பேசினாலும், அவர்கள் நமக்கு அயலார்கள் அல்லர்; நம்மோடு கூடப்பிறந்த வாழும் ஆப்தமானவர்கள்; அவர்களோடு முரணி நிற்றல் அறநெறியுமன்று; அருள் நெறியுமன்று; கருத்து வழிப்பரிமாற்றங்கள் மன அழுத்தங்களைக் குறைக்கும்; பகையைத் தவிர்க்கும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப் பெறும் செயல் முறைகளை, அச்செயல்முறையின் நோக்கங்களை அறிந்து பாராட்டுவோர் எத்தனை பேர்? பழி தூற்றுவோரே மிகுதி என்ற நடைமுறை அனுபவம் திருவாசகத்திற்கு ஒத்ததாக இருக்கிறது.

உத்தமன அத்தன் உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மாவிவுன் என்ன மனநினைவில்