பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

317


பெறுதல் அரிது. இவையெல்லாம் அறிந்தும் அறியாதவள் போல் வாளா கிடத்தியோ? என்று இரக்க முற்றுப் பாடுகின்றனர்.

இத்திருப் பாடலில், உயிர் ஆணவமலச் சார்பால் மயங்கிக் கிடந்துழி, இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி நன்னெறி, உணர்த்தியும், தோழனாகப் போந்தருளி நன்னெறியில் உடன்நின்று நடத்தியருளியும் ஆட்கொண்டருளும் திறன் பாராட்டப்பெறுகிறது. நாமும் நெஞ்சத்தைக் கடினமாக்கும் அறியாமையினின்றும் அகலுவோம்; உறக்கத்தைத் தவிர்த்திடுவோம்; காணும் காட்சி அனைத்திலும், கேட்கும் ஒலி அனைத்திலும் சிவத்தினைக் கண்டிடுவோம்; நெஞ்சத்தால், வாயால் “சிவ, சிவ” என்று எண்ணியும், சொல்லியும் இன்பநிலை எய்துவோமாக!

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழி வியம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கரணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையே
வாழியீ தென்ன வுறக்கமோ? வாய்திறவாய்
ஆழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற வொருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.

8

பொழுது புலர்கிறது; கோழி கூவுகிறது.. பொழுது புலர்வதைக் கோழி உணர்த்துகிறது. ஆம்! இருளில் கிடந்து தேறித் தெளிந்து பெற்ற உருவம்தானே சேவல்! அச்சேவலுக்குத் தானே பொழுது புலர்தலையும், புலர்தலின் அருமையையும் அறிந்து மகிழும் ஆற்றலுண்டு. அதனால், மகிழ்ந்து கூவுகிறது! அறியாமையின் பிணிப்பு இருள்! அறிவு தலையெடுத்தல் பொழுது புலர்தல்! பொழுது புலரும் மகிழ்ச்சியால் அறிவு தலைப்பட்ட இன்னுயிர்கள் இசைக்கருவிகளை இயக்குகின்றன; எங்கும் இன்ப இசைவெள்ளம்; இறைவனோடி