பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

325


கடைப்பிடித்து ஒழுகுகின்றன. மேலும், பெற்ற சிவானுபவத்தில் நிலைபெற்றிடவும் பழைய பழக்கம் வாராது தடுக்கவும், ஐந்தெழுத்தை எண்ணுகின்றன. இவையே உயிர்கள் உய்யும் வகை. உய்யும் நெறிகளில் எல்லாம் நின்று ஒழுகுதலால் இளைத்துப் போகாவண்ணம் இன்னே - இனிதே காத்தருள்க என்று பேசப்படுகிறது.

இறைவா! உயிர்களை ஆட்கொள்வதற்காகப் பிறப்பில் ஈடுபடுத்துதல், இன்பதுன்பங்களை வழங்குதல், அடித்தல், அணைத்தல் ஆகிய உனது அனைத்து அருள் விளையாட்டுத் துறைகளிலும் நாங்கள் பிழைபடாமல் தேர்ந்துள்ளோம். ஒரோவழி பிழைபட்டிருந்தாலும் பொறுத்துக் கொள்க! இன்று நேற்று நாங்கள் உனக்குத் தொழும்பு பூண்டவர்களல்ல; வழிவழி அடியோம்! பல்லாண்டு அடிமை பூண்டொழுகுவாரை எய்க்கவைப்பது ஆகாது. ஆதலின், எய்யாமற் காத்தருள்க! என்று வேண்டினார்கள். நாமும் வாழ்க்கையில் எய்த்தல் கூடாது. எய்ப்பினில் வைப்பாக விளங்கும் திருவருளை வாழ்த்துவோம்! அவனை நினைவூட்டும் திருநீறு அணிவோம்! அருளோடு உடனுறையும் பெருமானை வாழ்த்துவோம்! வாழ்வோம்!

ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடும்
தீர்ந்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தனிவ் வானுங் குவலயமு மெல்லோமும்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழன்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

12

இத்திருப்பாடல், பாவை நோன்பு நோற்கும் மகளிர். இறைவனின் திருப்புகழைப் பாடிக்கொண்டு சுனையாடுதலை இனிதே விளக்குகின்றது. நீராடும்பொழுது, இறைவன் திருப்