பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

329


கருடனைப் பாவிப்பதன் மூலம் பாம்பின் நஞ்சை இறக்குதலைக் காண்கின்றோம்.

‘அங்கம் குருகினம்’ என்பது, திருக்கரங்களால் தொட்டுப் பாசத்தை நீக்கிப் பதியருளைச் சேர்ப்பித்துக் காத்தல். ஒலி பேசப் பெறுவதால் திருவைந்தெழுத்தை உபதேசித்து நலம்புரிதல். இங்ஙனம், அம்மையப்பனாகிய பெருமானை அடைந்து, பெறுதற்குரிய அனைத்து இன்பத்தினையும் மடுவின் மேலேற்றி மொழிந்த எளிமையும் அருமையும் நினைந்து இன்புறத் தக்கது. நாமும் பெருமானின் திருவருளைப்பாடி மகிழ்ந்து அத்திருவருள் இன்பத்தினில் ஆழ்ந்து மகிழ்ந்து இன்புற்று ஆடுவோம்.”

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.

14

இத்திருப்பாடல், சிவபெருமானின் கீர்த்தியைப் பேசுகிறது. அம்மையின் புகழைப் பாடிப் பரவுகிறது. எம்பெருமானின் கீர்த்தியையும், அருளன்னையின் புகழையும் பாடி ஆடுக! என்று ஆற்றுப்படுத்துகிறது.

நோன்பு நோற்கும் மகளிர், பூஞ்சுனையில் பாய்ந்தாடும் பொழுது நிகழும் நிகழ்வுகளைப் பாடல் கூறுகிறது.

“காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட”

மகளிர் சீதப்புனலாடுகின்றனர்; சிற்றம்பலம்பாடி வேதப் பொருள்பாடுகின்றனர். வேத விழுப்பொருளாக விளங்கும்

கு.இ.VIII.22.