பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பரையே தழுவுக! எங்கள் கைகள் உனக்கே பணி செய்க! எங்கள் கண்கள் இரவும் பகலும் நின்னையே காண்க! இவ்விண்ணப்பத்தை ஏற்றருளிச் செய்யின் நாங்கள் பெரும் பேறு பெற்றவர்கள்! யாதொரு கவலையும் அற்றவர்கள். இறுமாந்து வாழ்வோம். ஞாயிறு எந்தத் திசையில் தோன்றினால் என்ன?

“உன் கையிற் பிள்ளை; உனக்கே அடைக்கலம்”- இது பழமொழி. திருமணக் காலத்தில் மணப் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைத்துச் சொல்லும் பழமொழி என்பர். தாயிடம் பிள்ளையைக் காப்பாற்று-என்று கூறியது என்பர். தாய்க்குப் பிள்ளையை வளர்த்தல் கடமை. தாய்க்கு நலமும் மகிழ்வும் தரும்பணி. ஆதலால் தாய்க்கு அறிவுறுத்த வேண்டியதில்லை. உயிர்க்குத் தந்தை இறைவன்; உயிர்க்குத் தாய் பராசக்தி. தந்தையாகிய இறைவன் தாய் பராசக்தியிடம் உணர்த்தியது என்றும் கொள்ளலாம். “நானுனக்குப் பிள்ளை; இன்றல்ல, நேற்றல்ல, வழிவழி அடியேன்; என்னைக் காப்பாற்றி அருள்க!” என்று எல்லாம் அறிந்த நின்னிடத்தில் விண்ணப்பிக்க அஞ்சுகின்றோம். உரிமைப் பொருளைவிட அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தல் கடமை. நாங்களோ உனக்கு அடைக்கலப் பொருள்! உரிமைப் பொருளுங் கூட! ஆதலால், நாங்கள் வேண்டுவதை எமக்கருளிக் காப்பாற்றுக! நாங்கள் கேட்பதும் மிகையன்று! ஆண்டானுக்கும் அடிமைக்கும் ஒருசேர நன்மை பயப்பவை; சிறப்புடையன; ஆண்டானுக்கு நலம் செய்வன; கருத்துச் சிறப்புடையன; ஆண்டானுக்கல்லாது அடிமைக்கே நலம் செய்வன - நலமுடையன அல்ல. அங்ஙனம் வேண்டுபவர்கள் ஆண்டான் - அடிமை நெறிமுறையில் நிற்பவர்கள் அல்லர்; மாணிக்கவாசகர் நல்லடிமை;

“மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்