பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருப்பள்ளியெழுச்சி


திரோதான சுத்தி


திருச்சிற்றம்பலம்


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழினகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

1

திருவாசகத்துள் திருப்பள்ளியெழுச்சி, நலம் நாடுவோர் நாளும் ஓதுதற்குரியது. நூற்குறிப்பு, திருப்பள்ளியெழுச்சியைத் ‘திரோதன சுத்தி’ என்று கூறும். நத்தையை நினைத்தால் முத்தை மகிழ முடியாது. புனுகு பூனையை நினைத்தால் புனுகின் மணத்தை அனுபவிக்க முடியாது. நத்தையை, புனுகு பூனையை மறந்தால்தான் துய்ப்பு; அவ்வழி மகிழ்ச்சி! அதுபோல் வினைப்பயனைத் துய்க்குங்கால் வினை நிகழ்ந்த வழியை நினைத்தால் துய்ப்பு தடைப்படும். துய்ப்புக்குத் துணை நிற்பது திரோதானம்.

உயிருக்கு மறைப்பினைச் செய்து வினைப்பயனைத் துய்க்குமாறு பக்குவம் செய்த திரோதான சக்தி, அருட் சக்தியாக வெளிப்பட்டு அருளும் காலம் திருப்பள்ளியெழுச்சி. இப்பக்குவ நிலையை, உயிர்கள் பெற்று, இறைவனை எழுந்தருளவும், வேண்டிச் செய்யும் பணியையும் கேட்டு நிற்பது திருப்பள்ளியெழுச்சி! உயிர், அருட்சக்தி தலைப்படலால் தனது உள்ளத்தில் இறைவனை