பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


தாய்போல் கருணையன்


இறைவன் காண்பதற்கு அரியவன்; கடவுள் காணப்படாத பொருளா! இல்லை, இல்லை! கடவுளைக் காண முடியும். கடவுள் அளவுகளால் அளந்தறியப் படாதவன்.

“நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கு அருமை” என்று திருவாசகம் பேசும். அவன் ‘ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்’ பிறவா யாக்கைப் பெரியோன்; மனம் வாக்குகளுக்கு எட்டாதவன்! ஆயினும் நம்முடைய மனத்தில் எழுந்தருளுகின்றவன்!

அண்டங்களாகப் பரந்திருக்கும் பொருள், நமது உள்ளத்திற்குள் ஒடுங்கி இருந்தருள் செய்யும் கருணையைப் பட்டினத்தடிகள் வியந்து பாடுகின்றார். “அளவினில் இறந்த பெருமையை, ஆயினும், எனதுளம் அகலாதொடுங்கி நின்றுனையை” என்று பாடுகின்றார்.

திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்றார். இதற்குப் பரிமேலழகர், “அவரவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினான் என்றார்” என்றெழுதும் உரை நினைந்து இன்புறற்பாலது. திருவாசகமும் “என்றன் உடலிடம்