பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே” என்று கூறகிறது.

அப்பரடிகள் “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டான்” என்று அருளிச் செய்துள்ளார். இறைவன் மிக விரும்புவது கற்கோயிலை யன்று. மனக்கோயிலையே! கற்கோயில் எழுந்தருளியது மனக்கோயிலில் புக வாயில்கள் காணவே!

அதனாலன்றோ, பல்லவ மன்னன் கட்டிய கற் கோயிலில் எழுந்தருளுதலைவிட பூசலார் எழுப்பிய மனக்கோயிலிற் புகுவதற்கு விரைந்தார்.

இறைவன் உயிர்களுக்கு அருள் வழங்குவதில் முன்னிற் பான். அந்த வகையில் கடவுள் ஓர் நாயகன். அவனுக்கென்று ஒரு வடிவம் இல்லை. ஏன்? அவன் உலகே வடிவமானவன்.

அப்பரடிகள் “எல்லா உலகமும் ஆனாய்” என்றார். நமது பட்டினத்தடிகளும் “மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும், வையகம் முழுதும் நின் வடிவம் எனப்படும்” என்றார். ஆதலால் உயிர்கள் உற்றறிவனவெல்லாம் அவன் அறிவான்!

இறைவன் ஞானியரிடத்தில் - அடியார்களிடத்தில் விளங்கியருளுகின்றான். அல்லாதாரிடத்தில் விளக்கமுறுவதில்லை. ஏன்? ஆணவ இருள்வழி மயக்கில் வெளிப்படுவதில்லை. அன்பும் தவமும் பெருகப் பெருக இறைவன் வெளிப்படுவன்; விளங்கித் தோன்றுவன்; அறிந்தும் உணர்ந்தும் அனுபவித்தும் ஆனந்திக்கலாம். இறைவன் எய்ப்பினில் வைப்பு.

இறைவன் உயிர்களை அதனதன் பக்குவநிலைக்கேற்ப ஆட்கொள்கின்றான். ஆட்கொள்ளும் பொதுத் தன்மையில் வேறுபாடில்லை. முறைகளிலேயே வேறுபாடு. அவன், போகியாக இருந்தும் ஆட்கொள்கின்றான். அவன் யோகியாக இருந்தும் ஆட்கொள்கிறான். துறவியாக இருந்தும்