பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23


கொல்லாமை வேண்டும்


பட்டினத்தடிகள் முழுதுணர்ந்த ஞானி. அவர் உலகியலை அறிந்து வருந்தியதைப் போல யாரும் வருந்தவில்லை. மனித உலகில் தொடர்ந்து நடைபெறும் ஓர் அநீதி - வல்லாளன் வல்லமை இல்லாதானை அடித்துச் சாப்பிடுதல்.

உலகில் எத்தனையோ சமய நெறிகள் தோன்றியும், இலக்கியங்கள் தோன்றியும், சட்டங்களும் அவ்வழிப்பட்ட ஆட்சி முறைகளும் தோன்றியும் இந்த அநீதி நீங்கிய பாடில்லை.

காலையிலிருந்து மாலை வரையில் கடுமையாக உழைப்பவர்க்கு வாழ்க்கை இல்லை. அவர்கள் பிழைக்கிறார்கள். ஏன் இந்த அநீதி? இந்தக் கேள்வியை பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோவும் கேட்டார்; சோவியத் புரட்சிக்குத் தந்தையாகிய லெனினும் கேட்டார். நமது அருள்ஞானத் துறவியாகி பட்டினத்தாரும் கேட்கிறார். மற்றவரைக் கொன்று வாழுதலும் வாழ்க்கையாமோ?

வல்லோர், வலிமையில்லாதாரை அடுதலும் தொலைத்தலும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து நடந்து வரும்