பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/429

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


தாயுமான சுவாமிகள்


தமிழகம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தமிழக வரலாற்றைக் காலம்தோறும் அறிஞர்கள், சித்தர்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளனர். தமிழ், வளர்ந்த மொழி. தமிழ் இனிமையும் எளிமையும் நிறைந்த மொழி. தமிழ் இலக்கிய இலக்கண வளம் கொழிக்கும் மொழி. தமிழ் ஒரு தத்துவமொழி. மெய்ப்பொருள் கண்டுணரவும் செம்பொருளைக் காணவும் துணை செய்யும் மொழி. தமிழ், ஞானத்தமிழ். தமிழ், மானுடம் பேசிய மொழி. தமிழ், மானுடம் வளர்த்த மொழி. வெள்ளத்தைக் கடந்து வளர்ந்தது தமிழ். நெருப்பினை வெற்றி கண்டமொழி தமிழ். ஆரியம் கதவைச் சாத்தும். தமிழ் கதவைத் திறக்கும். தமிழோடிசை கேட்கும் இச்சையால் நாளும் காசு கொடுத்துக் கடவுளும் கேட்ட மொழி-கன்னல் தமிழ். தேரோடும் திருவாரூர் நெடுவீதியில் இறைவன் நடந்தது நற்றமிழ் கேட்டின்புறத்தானே! வேதங்கள் ‘ஐயா!’ என்று தேடிய திருவடிகள் பரவையார் வீட்டுப் படியில் தோய்ந்தது சுந்தரரின் செந்தமிழ் கேட்டு இன்புறத்தானே! வையை யாற்றங்கரையில் பிட்டுக்கு மண் சுமந்து மொத்துண்டு புண் சுமந்தது பண்சுமந்த பாடல் பரிசு பெறத்தானே! இங்ஙனம் தமிழின் பெருமை