பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட்டது. தாயுள்ளம் தவித்தது. தாய், சிராப்பள்ளி மேவிய சிவனைத் தொழுதாள்; வேண்டினாள்; மகளுக்கு உதவி செய்ய சிராப்பள்ளி மேவிய சிவனும் சடுதியில் தாயெனச் சென்று மகப்பேற்றிற்கு உதவி செய்தனன். அன்று முதல் திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் தாயுமானவர் என்ற பெயர் நின்று விளங்குவதாயிற்று. திருச்சிராப்பள்ளியில் தாயுமானவர் பெயரில் மகப்பேறு மருத்துவமனை அமைப்பது சிறந்த அறம். மகளிரைப் பொறுத்தவரையில் மகப்பேறு மரணவாயிலிலிருந்து தப்புவது போன்றது. ஆயினும் எந்த ஒரு பெண்ணும் மகப்பேற்றை - தாயாக ஆவதை மறுப்பதில்லை. ஏன்? ஒருவர் மானுட வடிவம் பெறத் துணையாய் அமைவது தாய்மைதானே! இயற்கையாக அமைந்த அறம் இது. மேலும் தாய்மைக்குத் துணை செய்யாத காமம் - இன்பம் விலங்கின் தன்மையது. தாய்மைக்குத் துணை செய்யும் காதலின்பமே இன்பம். தாயுமான ஈசனின் தண்ணருள் போற்றுதும்! போற்றுதும்!

சிவானுபூதிச் செல்வராக விளங்கிய தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் பிறந்தவர். சைவ வேளாண் மரபில் கேடிலியப்ப பிள்ளைக்கு ஆண் மகவு பிறந்தது. திருச்சிராப்பள்ளியில் பிறந்தது. பெற்றோர்கள் தாயுமானவன் என்று பெயரிட்டனர். தாயுமானவர் முறையாகத் தமிழும் வடமொழியும் பயின்றார். தேவாரத் திருமுறைகள், திருவாசகம் முதலியவற்றை ஓதுவார். அந்நூல் வழி திருவருள் பேற்றினை உணர்ந்தார்.

தந்தையார் காலமாக, தந்தையார் பார்த்த அரசுப்பணி வழி வழி தாயுமானவருக்கும் கிடைத்தது. ஆனால், திருவருள் நாட்டமே தாயுமானவரை ஆட்கொண்டு ஆட்டிப் படைத்தது. சாரமாமுனிவரைக் காணும் பேறு கிடைக்கிறது. சாரமாமுனிவர் யோக ஞான முறைகளைக் கற்றுத் தந்தார்; உணர்த்தினார். சாரமாமுனிவர் உணர்த்திய நெறி, சிவஞான சித்தி நெறி. சிவஞான சித்தியாரில் எட்டாவது நூற்பாவில்