பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/436

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31


வள்ளலார் நெறி I


எந்தக் குறையை எந்த ஒரு பெரியார் எந்த நாளிலே இது தவறு என்று இடித்துக் கூறினாரோ அந்தத் தவற்றை அந்தக் குறையை அவர் காலத்திலாவது அல்லது அடுத்த தலைமுறையிலாவது நாம் நீக்கினோ மில்லை. குறை களைந்தோம் இல்லை.

திருவள்ளுவர் காலந்தொட்டு அப்பரடிகள் காலம் உள்பட மாணிக்கவாசகர் காலம் உள்பட இராமலிங்க அடிகள் காலம் உள்பட இன்றுவரை அவர்கள் இடித்துக் கூறிய குறைகளையே நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர-சொல்லி வந்திருக்கிறோமே தவிர அவற்றிலிருந்து மக்கள் விடுதலை பெற்றிருக்கிறார்களா என்றால் இல்லை இல்லை இல்லை என்ற பதில் தான் கிடைக்கும்.

இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுக்கு ஒருதரம் அல்ல, ஒரு நூற்றாண்டுக்கு ஒருதரம் பெரியவர்கள்-கொள்கையாற் சிறந்தவர்கள் - சால்புடையவர்கள் - சான்றாண்மையுடையவர்கள் தோன்றி இனிய தமிழில் எண்ணற்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்லி வந்திருந்தாலும்கூட அவற்றையெல்லாம்